சித்ராவின் குரலில் மனதை மயக்கும் வாரிசு படத்தின் ‘அம்மா’ பாடல் – சிவகாசிக்கு பின் ஒரு சூப்பரான அம்மா பாடம்

0
684
varisu
- Advertisement -

தளபதி விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் மூன்றாம் பாடல் வெளியாகி இருக்கிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக ஆஸ்தான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. இதனை அடுத்து தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

பொங்கல் வெளியீடு :

மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கிறது.

வாரிசு படத்தின் பாடல்:

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தான் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி இருந்தது. இந்த பாடலை விஜய் பாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மேலும், இந்த பாடல் மொச்ச கொட்ட பல்லழகி பாடலின் காப்பி போன்று இருக்கிறது என்று கேலிகள் உள்ளாது. இதுகுறித்து விளக்கமளித்த பாடலாசிரியர் விவேக், படத்தில் மொச்ச கொட்ட பல்லழகி பாடலலை தொடர்ந்தே இந்த பாடல் வரும் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

தீ தளபதி பாடல் :

இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி பாடல் வெளியாகியிருந்தது.இந்த பாடலை விஜய் திரைத்துறையில் நுழைந்து முப்பது வருடங்கள் நிறைவானதை ஒட்டி படக்குழு சமர்ப்பித்திருந்தது. மேலும், இந்த பாடலை சிம்பு பாடி இருந்தார். இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல மில்லியன் பார்வையாளர்களை குவித்தது.

மூன்றாம் பாடல் :

இந்நிலையில் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. Soul Of Varisu என்ற அந்தப் பாடலை பிரபல பாடகி சித்ரா பாடியிருக்கிறார். பாடலாசிரியர் விவேக் அதனை எழுதியிருக்கிறார்.சிவகாசி திரைப்படத்திற்கு பின்னர் விஜய் படத்தில் இடம்பெற்றிருக்கும் அம்மா பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் சித்ரா தான் பாடி இருக்கிறார்.

Advertisement