படத்தில் தான் வில்லன் நிஜத்தில் ஹீரோ – புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்ய வைத்த CWC பிரபலம் மைம் கோபி

0
153
MIME
- Advertisement -

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நடிகர் மைம் கோபி செய்திருக்கும் செயல்தான் தற்போது சோசியல் மீடியாவில் பாராட்டைப் பெற்று வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மைம் கோபி. இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் மிரட்டி இருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் மைம் கலை, நடிப்பு பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும் மைம் கலை மூலமாக இவர் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு வெற்றிகரமாக முடிவடைந்த குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக மைம் கோபி கலந்து கொண்டிருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்று வருகிறது. இதுவரை நான்கு சீசன்களை கடந்து இருக்கிறது. இது சமையல் மட்டுமில்லாமல் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது.

- Advertisement -

மைம் கோபி குறித்த தகவல்:

கடந்த ஆண்டு முடிவடைந்த நான்காவது சீசனில் மைம் கோபி கலந்து கொண்டு முதல் பரிசையும் வென்றிருந்தார். அதோடு இதுவரை முடிவடைந்த சீசனிலேயே இந்த சீசனில் தான் ஒரு ஆண் போட்டியாளர் டைட்டில் பட்டதை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இவர் படங்களிலும் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மைம் கோபி சமூக சேவையும் செய்யக் கூடியவர். நிறைய பேருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

மைம் கோபி பேட்டி:

குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வென்ற பரிசு தொகை முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துவிட்டார். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதன் முதலில் மைம் கோபி அவர்கள் விமானத்தில் அழைத்து சென்று இருக்கிறார். இதனை அடுத்து இவர் செய்தியாளர்களை சந்தித்து, இங்கு எல்லோரும் குறையை தான் பார்க்கிறோம். நிறைய பார்க்க மாட்டோம்.

-விளம்பரம்-

மைம் கோபி சொன்ன அட்வைஸ்:

நிறைய பார்த்தாலே குறை தெரியாது. இதற்கு நிறைய காசு ஆகவில்லை. மனதிருந்தால் போதும் பணம் பெரிதாக தெரியாது. எல்லோரையும் சகோதரர்கள், குடும்பமாக பார்த்தால் பணம் பெரிதாக தெரியாது. உங்களுடைய பிள்ளைகளை, தம்பிகளை அழைத்துச் செல்ல பணம் பற்றி யோசிப்பீர்களா? இது உதவி இல்ல கடமை. என்னுடைய குடும்பத்தை அழைத்து செல்வது எப்படி கடமையோ அதே மாதிரி தான் இதுவும் என்னுடைய கடமை. வசதியாக இருப்பவர்களுக்கு விமானத்தில் செல்வது எளிதான ஒன்று.

நெட்டிசன்கள் பாராட்டு:

இவர்கள் வானத்தைப் பார்த்து எப்போ போவோம் என்று நினைக்க கூடியவர்கள். இவர்களை அழைத்து சென்றால் என்ன? என்று தான் அழைத்து போனேன். பணம் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுவது தவறு கிடையாது. இது எதற்கு என்றால் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதற்கு தான். சந்தோசம் பெருகினால் ஆயில் கூடும் என்பார்கள். அவர்கள் சந்தோஷப்பட்டால் அவர்களுடைய ஆயுள் கூடும் என்று நான் நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார். தற்போது மைம் கோபியின் இந்த செயல் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

Advertisement