கடந்த சில காலமாக நடிகர் விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டு வருகிறது. சமீபத்தில் இவர் நடிகர் சங்க பணத்தை கையாடல் செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதன் பின்னர் நடிகர் சங்க விவகாரத்தில் கைதும் செய்யப்பட்டார் விஷால்.

அதோடு மட்டுமல்ல திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை விஷால் தான் நடத்தி வருகின்றார் என்ற பேச்சும் அடிபட்டது. இந்நிலையில் நடிகர் விஷாலை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் இயக்குனர் வசந்த பாலன்.

இதையும் படியுங்க : முதலில் காதலை சொன்னது யார்.!காதல் ஸ்டோரி கூறும் விஷால்.! 

Advertisement

கந்துவட்டி கொடுமைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பொது நலன் கருதி’ படம் வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் வெயில், அங்காடி தெரு போன்ற படங்களை இயக்கிய வசந்த பாலனும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய அவர், சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்களுக்கும் அதே நிலைமை தான்.
சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. கன்னட படமான கே.ஜி.எப் படம் இன்னமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகவில்லை.

Advertisement

மற்ற மொழி படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வருவது கடினமாக உள்ளது. அது ஏன் இங்கு இல்லை… பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்” என்று ஆவேசமாக பேசினார். கே ஜி எப் படம் தமிழகத்தில் விஷாலால் வெளியிடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement