முதலில் காதலை சொன்னது யார்.!காதல் ஸ்டோரி கூறும் விஷால்.!

0
562
Vishal-wife

நடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த நடிகையயை திருமணம் செய்துகொள்ள போவதாக அவரே அறிவித்திருந்தார். தெலுங்கு நடிகையான அனிஷா அல்லா என்பவரை விஷால் காதலித்து திருமணம் செய்துகொள்ள உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷால் தனது காதல் கதை குறித்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :-

நான் அயோக்யா என்ற படத்தில் விசாகப்பட்டினத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது சிலர் என்னை சந்தித்தனர். அந்த குழுவில் அனிஷாவும் இருந்தார். பெண்கள் இணைந்து ‘மைக்கேல்’ என்ற ஆங்கில படத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் அனிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் அபூர்வா இயக்குகிறார் என்றும் தெரிவித்தனர்.

அந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்துப்போக நானே அந்த படத்தை வெளியிடுகிறேன் என்று கூறினேன். அதன் பின்னர் நானும் அனிஷாவும் நண்பர்களாக தான் சில நாட்கள் இருந்து வந்தோம். பின்னர் அது ஒரு கட்டத்தில் காதலாக மலர்ந்தது.

நான் தான் அனிஷாவிடம் முதன் முதலில் காதலை சொன்னேன். முதலில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை சில நாட்கள் கழித்து காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். திருமணம் ஆன பின்னரும் அவர் சினிமாவில் நடிக்க நான் தடை சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார் விஷால்.