ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவை வசந்த பாலன் அடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் அவர்கள் இணைந்து தயாரித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி, ஜீவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சென்னையில் உள்ள பிரபல கடையில் பணிபுரியும் வறுமையான கிராமத்து இளைஞர்கள் படும் கஷ்டத்தை தோலுரித்து காட்டியது இந்த படம்.சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள பிரமாண்ட வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட கதை. இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிளேயே எடுக்கப்பட்டது.
இந்த படத்தை இயக்கிய வசந்த பாலன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து உள்ளார். ஆல்பம், வெயில் அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் உட்பட பல படங்களை இயக்கி உள்ளார். இறுதியாக அநீதி படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் சில இயக்குனர்கள் கடிமனாக நடந்துகொள்வது வழக்கமான விஷயம் தான்.
இதில் மிஸ்கின் பாலா போன்ற இயக்குனர் தான் நடிகர்களை மிக கடுமையாக நடத்துவார்கள். அதிலும் பாலா, நடிகர்களை ஷூடிங் ஸ்பாட்டில் அடித்து இருக்கிறார் என்ற சில விமர்சனங்களும் இருந்தது வருகிறது. இந்நிலையில் அங்காடி தெரு படத்தில் இயக்குநர் வசந்தபாலன் அவர்கள் ஒரு பாடலுக்கு நடனம் சொல்லித் தந்து உள்ளார். அது உன் பேரை சொல்லும் என்ற பாடலுக்கு நடனம் சொல்லி தந்து உள்ளார்.
அப்போது நடிகர் மகேஷ் அவர்களுக்கு நடனம் சரியாக வராததால் இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் ஹீரோவை அடி அடி என்று வெளுத்து வாங்கி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இந்த அளவிற்கு மகேஷ் உழைத்து உள்ளாரா?? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு உள்ளது. சமீபத்தில் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்து இருந்தார் வசந்த பாலன்.
இந்தப்படத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கும் பெண்ணைத்தான் இந்த கதையில் முதலில் கதாநாயகியாக நடிக்க வேண்டி இருந்தது. ஆனால், படம் ரொம்ப ராவா இருக்கும் என்பதால் ஒரு சின்ன ரொமான்ஸ் வைக்கலாம்னு திட்டம் செய்து. பின்னர் சினிமா தெரிந்த பெண்ணாக இருந்தால் ரொமான்ஸ் வொர்க் அவுட் ஆகும் என்று நினைத்தோம்.நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த அந்தப் பெண் வசனம் நடிப்பு என்று எல்லாம் சரியா செய்து விடுவார்கள் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் ரொமான்ஸ் போர்ஷன் நடிக்க கூச்சப்பபட்டுவிட்டாள் என்றால் சரியாக இருக்காது என்று யோசனை வந்தது அப்போது கற்றது தமிழ் பார்த்துவிட்டு அஞ்சலியை ஹீரோயினாக நடிக்க செய்தோம் என்று கூறி இருந்தார்.