-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ஸ்ரீதேவியை தெரிகிறது, உடன் இருக்கும் இந்த சிறுவன் யார்னு தெரியுதா ? ஸ்ரீதேவி போலவே இவரது இறப்பும் கொடுமை தான்.

0
1030
Sridar

ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களில் பலர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கின்றனர். ஆனால், ஸ்ரீதேவி அளவுக்கு யாரும் பிரபலமடையவில்லை. ஆனால், புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவனை 60,70 காலகட்ட ரசிகர்கள் நிச்சயம் அறிந்து இருப்பார்கள். இவர் வேறு யாரும் இல்லை மாஸ்டர் சேகர் தான். இவரது இயற்பெயர் ஜே.வி.சேகர் தான். ஆனால், மாஸ்டர் சேகர் என்று நன்கு அறியப்பட்டவர், ஒரு இந்திய குழந்தை நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் தோன்றினார்.

-விளம்பரம்-

சேகர் 7 ஜனவரி 1963 இல் பிறந்தார். அவர் நான்கு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்) 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 1968 ஆம் ஆண்டு குடியிருந்த கோயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழில், ஒளிவிளக்கு, குடிருந்த கோயில், மணிப்பயல், அன்னமிட்ட கை, நல்லதொரு குடும்பம், எங்கமாமா, அனாதை ஆனந்தன், எங்கம்மா சபதம், ஓ மஞ்சு, வாணி ராணி, கவரிமான், சக்கரம், கட்டிலா தொட்டிலா, ராஜா, அகத்தியர் போன்ற படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் .

மாஸ்டர் சேகர். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்தெலுங்கில் அக்கா தம்முடு (சக்கரம் படத்தின் தழுவல்) இவரது நடிப்பில் வெளியானது.எம்ஜிஆர். படங்கள் பலவற்றில் அவரது சிறு வயது தோற்றத்தில் நடித்தவர் மாஸ்டர் சேகர். குறிப்பாக குடியிருந்த கோயில் மற்றும் இதய வீணை. வாணி ராணி படத்தில் சிவாஜி கணேசன் , வாணிஶ்ரீ அவர்களுடன் கழைக்கூத்தாடி குழுவில் ஒருவராக வருவார். இவரிடம் இறுதி திரைப்பட வாழ்வில் கவரிமான்’ படத்தில் ஶ்ரீதேவி காதலராக வருவார்.

-விளம்பரம்-

கிளைமாக்ஸில் ஶ்ரீதேவியை பலாத்காரம் செய்ய முயன்று உடைந்த பாட்டிலில் குத்து பட்டு சாவார். அந்த கொலை பழியை தன் மகளுக்காக நடிகர் திலகம் ஏற்று கொண்டு சிறைக்கு செல்வதாக படமும் முடியும். மணிப்பயல், எங்கமாமா மற்றும் இதயவீணை படத்தில் சுட்டிப் பையனாக நடித்து பரவலாக பேசப்பட்டவர். வளர்ந்த பின்னரும்சுமார் 30 படங்களில் நடித்தார். சிலவற்றில் ஹீரோவாகவும் தோன்றினார்.ஓ மஞ்சு படத்தில் கதாநாயக பாத்திரம் ஏற்று நடித்தார்.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்புகளை இழந்த பிறகு டிவி நாடகங்களில் நடித்து வந்தார். கோடம்பாக்கம் இயக்குனர்கள்
காலனியில் இவரது வீடு உள்ளது. இங்கு இரண்டாவது மாடியைக் கட்டி வந்தார் சேகர். கட்டப்பட்டு வரும்கட்டடத்துக்கு நீர் ஊற்றுவதற்காக இரண்டாவது மாடிக்குச் சென்றார். அப்போது சரியாக காயாத சிமெண்ட் சிலாபில் காலை வைத்தார். அது உடைந்ததில் இரண்டாவது மாடியில்இருந்து சேகர் கீழே விழுந்தார்.

கூகுள் தேடலில் தேடினால் இவர்கள் இருவரின் புகைப்படம் தான் மாஸ்டர் சேகர் என்றும் வருகிறது.

தரையில் மோதியதில் மண்டை உடைந்து ரதத வெள்ளத்தில் மயங்கினார். உயிருக்குப் போராடிய அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். அப்போது அவருக்கு வயது 40. அவருக்கு மனைவியும், இரு சிறு குழந்தைகளும் உள்ளனர். இவர் ஒளிப்பதிவாளர் ஜேவி விஜயத்தின் மகன். சேகரின் தந்தை விஜயம் சாகுந்தல விஜயம் உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்த பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளராவார். அதே போல இந்த புகைப்படத்தில் இருப்பது மாஸ்டர் சேகர் தானா என்று நெட்டிசன்கள் பலர் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news