பாபி சிம்ஹா நடித்துள்ள ‘வசந்த முல்லை’ எப்படி இருக்கிறது ? – முழு விமர்சனம் இதோ.

0
1168
Vasantha Mullai
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பாபி சிம்ஹா. இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பாபி சிம்ஹா அவர்கள் ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் பாபி சிம்ஹா தற்போது நடித்துள்ள படம் வசந்த முல்லை நேற்று வெளியானது.

-விளம்பரம்-

கதைக்களம் :

மென்பொருள் துறையில் வேலை செய்யும் ருத்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா. ஜ டி ஊழியர்கள் அதிகம் சம்பாதித்தாலும் அதன் எதிர்மறையின் பிம்பமாக கதை தொடங்குகிறது. ருத்ரன் பணிச்சுமையால் தன்னுடைய மனைவிக்கு கூட நேரம் ஒதுக்காமல் மனஅழுத்தத்தில் இருக்கும் ருத்ரனை அவரது மனைவி மலைபகுதிக்கு சுற்றுலா அழைத்து செல்கிறார். அப்படி அழைத்து செல்கையில் வழியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்குகின்றனர். அப்படி தங்கும்போதுதான் வில்லேந்திய ஒரு உருவம் அவரை கொலை செய்ய முயற்சி செய்கிறது. இதிலிருந்த அவர் அப்படி தப்பித்தார். அந்த வில்லேந்திய உருவம் யார் என்பதுதான் மீதி கதை.

- Advertisement -

ஹாலிவுட் பட கதையில் வருவதை போல டைம் லூப்பில் மாட்டிக்கொண்டு திரும்ப திரும்ப ஒரே நிகழ்வுகளை ருத்ரன் எதிர்கொள்கிறார். அப்படி அவர் எதிர்கொள்ளும் அந்த நிகழ்வுகள் உண்மையில் கால வளையம் கிடையாது என்பதை இறுதி கட்சியின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களில் தேர்வு, கலை, இயக்கம், ஒளிப்பதிவு, போன்றவைகள் சரியாக தேர்ந் தெடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் இப்படி திரும்ப திரும்ப வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆனால் பெண்பொருள் துறையின் நெகட்டிவ் பக்கத்தை சொல்ல முயற்சி செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். பாபி சிம்ஹா நடிப்பு சரியாக இருந்தாலும் சில இடங்களில் அவை ஒத்துப்போகவில்லை. குறிப்பாக இவர் கோவப்பட்டு கத்தும் காட்சிகள் சரியாக பொருந்தவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதே போல சில காட்சிகளில் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இயக்குனர் தவறிவிட்டார்.

-விளம்பரம்-

இப்படத்தில் ஆர்யா சில காட்சிகளே வந்திருந்தாலும் படத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதே போல ஊழியராக வரும் கொச்சு, மருத்துவராக வரும் பாபு போன்றவர்கள் நல்ல நடிப்பையே கொடுத்திருகின்றனர். மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு போன்றவற்றில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கின்றனர்.

குறை :

லூப் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்கிறது.

வசனங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

நிறை :

பின்னனி இசை, ஒளிப்பதிவு போன்றவை பிரமாதம்.

கதாபாத்திரங்கள் தேவையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

திரைக்கதை ஓகே.

மொத்தத்தில் தூக்கமில்லை என்றால் வசந்தமில்லை.

Advertisement