இந்தியன் படப்பிடிப்பின் போது நடிக்க சொல்லிக்கொடுத்ததால் டென்ஸனாகி கமல் திட்டியதை நினைவு கூர்ந்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்த பல வெற்றிகரமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரான வசந்த பாலனும் ஒருவர். இவர் இயக்கிய அங்காடிதெரு, வெயில் போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல 2006 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
மேலும் அங்காடித்தெரு திரைப்படம் சிறந்த படைப்பிற்கான விருதுகளையும் அள்ளிக் கொடுத்தது.வெயில் மற்றும் அங்காடித்தெரு திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய காவியத்தலைவன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் இவருக்கு சிறந்த இயக்குனர் என்ற விருதையும் பெற்றுத்தந்தது. ஆனால் இத்தனை வெற்றி படங்களை கொடுத்த வசந்தபாலனின் முதல் படம் மாபெரும் தோல்விப் படம் தான் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
இயக்குனர் வசந்தபாலன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் காதலன் இந்தியன் போன்ற படங்களில் ஷங்கருக்கு உதவி இயக்குனராக இருந்தவர் வசந்தபாலன். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வசந்தபாலன் இந்தியன் படப்பிடிப்பின் போது தனக்கும் கமலுக்கும் ஏற்பட்ட சண்டை குறித்து பேசி இருக்கிறார்.
Director #Vasanthabalan About Conflict With #Kamal During Indian Movie Shooting pic.twitter.com/qPk9XsQnDp
— chettyrajubhai (@chettyrajubhai) May 11, 2023
இந்தியன் படத்தின் ஒரு காட்சியில் நெடுமுடி வேணு, கமலை ஒரு சமையல் அறையில் விலங்கு மாட்டி வைத்து இருப்பார். அந்த காட்சியில் அவர் கேஸ் சிலண்டரை பற்ற வைத்து விலங்கை காண்பித்து விடுவித்துகொள்ளும்படி காட்சி இடம்பெற்று இருக்கும். இந்த காட்சியில் முதலில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த வசந்த பாலனை வைத்து ட்ரையல் பார்த்துள்ளார் ஷங்கர். அப்போது வசந்த பாலன் சட்டென்று எழுந்து நெருப்பில் விலங்கை காண்பித்து விடுவித்து கொண்டு உள்ளார்.
பின்னர் இதே காட்சியில் கமல் நடித்த போது மிகவும் அருமையாக நகர்ந்த நகர்ந்து வந்து விலங்கை நெருப்பில் காட்டி விடுவித்து கொள்வாராம். இதனால் சங்கர் வசந்த பாலன் நடித்த போது இந்த காட்சி நன்றாக வந்தது. இப்போது மட்டும் இந்த காட்சி இழுத்துக் கொண்டே போகிறது என்று யோசித்து மீண்டும் வசந்த மாளிகை நமக்கு நடித்துக் காண்பிக்க சொன்னாராம். மீண்டும் வசந்த பாலன் அந்த காட்சியை மிக விரைவாக நடித்து முடித்து இருக்கிறார்.
இதனால் கடுப்பான கமல் செட்டில் கூச்சலிட்டு கச்சா முச்சா என்று கத்தினாராம். மேலும், என்ன முட்டாள்தனம், இது என்ன நெனேசிட்டு இருக்க நீ , இது என்ன கேரக்டர் தெரியுமா ? நீ யாரு உனக்கு எல்லாம் என்ன நடிக்க தெரியும் என்று என்னென்னவோ திட்டிவிட்டார். இதனால் அந்த அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே அங்கிருந்து கிளம்பி வந்து படுத்து விட்டேன். எனக்கு மிகவும் அழுகை அழுகையாக வந்துவிட்டது.
வேலையைப் போல விட்டுவிட்டு சென்றுவிடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்’ என்று பேசி இருக்கிறார் வசந்தபாலன். ஆனால், உண்மையில் யோசோத்து பார்த்தால் கமல் நடித்த முறை தான் சரியானது என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். வயதான ஒரு நபர் எப்படி சட் சட்டென எழுந்து வருவார். அவர் பொறுமையாக தான் எழுந்து வருவார் என்று பலர் கமண்ட் செய்து வருகின்றனர்.