படத்துல நடிக்கறதுக்கு முன்னாடி அவர் நடிச்ச 5 பாட்ட பாக்க சொன்னேன் – வசீகரா பட இயக்குனர் சொன்ன சுவாரசிய தகவல்.

0
897
vaseegara
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் செல்வபாரதி இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த வசீகரா படம். வசீகரா படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் சினேகா, மணிவண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் வசீகரா படத்தின் இயக்குனர் செல்வபாரதி சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவர் விஜய் குறித்தும், வசீகரா படம் குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, வசீகரா படம் கமிட் ஆன உடனே விஜய் அவர்களை சந்தித்து அவரிடம் நான் முந்தைய 5 படங்களின் பாடல்களை எல்லாம் கொடுத்து பார்க்கச் சொன்னேன். அவர் ஏன்? என்று கேட்டார். நானும் நீங்களும் பாருங்கள் அதற்குப் பிறகு சொல்கிறேன் என்று சொன்னார். அவரும் அந்த பாடல்களையும் பார்த்துவிட்டு என்ன சொல்லுங்கள்? என்று கேட்டார். அந்த ஐந்து பாடல்களிலும் ஹீரோயினி தான் மாறி இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : சந்திரமுகி ஸ்வர்ணமா இது ? என்ன ஒரு மாடர்ன் Mom. இவருக்கு இவ்ளோ பெரிய பசங்களா.

- Advertisement -

ஆனால், உங்களுடைய ஹேர் ஸ்டைல், மீசை, காஸ்டியும் என எதுவுமே மாறவில்லை. அப்படியேதான் இருக்கு. ஆனால், இந்த படத்தில் உங்களுடைய கெட்டப், பாடி லாங்குவேஜ் எல்லாம் மொத்தமாக வேற மாதிரி இருக்கணும் என்று சொன்னேன். உடனே அவரும் சரி என்று சம்மதம் தெரிவித்தார். மேலும், எப்படி வித்தியாசமாக? விஜய்யை காட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சச்சின் டெண்டுல்கர் உடைய ஹேர் ஸ்டைல் எனக்கு நினைவுக்கு வந்தது. அது விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. மறுநாள் நான் விஜயிடம் அதைப்பற்றி சொன்னேன். முதலில் யோசித்த அவர் சரி என்று அதே மாதிரி ஹேர் ஸ்டைல் வைத்து என்னை அழைத்தார்.

பின் அவரை பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. விஜய்க்கு அந்த ஹேர் ஸ்டைல் அருமையாக இருந்தது. அவருடைய கெட்டப் மாற்றியது அந்த படத்திற்கு பிளஸ் என்று சொல்லலாம். அதே மாதிரி படத்தில் விஜய் பாடி லாங்குவேஜ் எல்லாம் எம்ஜிஆர் போலவே இருக்கும். அதற்கு காரணம் என்னவென்றால், படத்தின் அறிமுகக் காட்சி கொஞ்சம் மாஸாக இருக்க வேண்டும் என்று நினைத்து விஜய்யை எம்ஜிஆர் ரசிகர் மன்ற தலைவராக நாங்கள் காட்டினோம். அதனாலேயே படம் முழுவதும் விஜய் அவர்கள் எம்ஜிஆர் மாதிரியே இருப்பார். விஜய் பொருத்தவரை எந்த படமாக இருந்தாலும் அதற்கேற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளக் கூடிய திறன் உடையவர். அதனாலேயே தான் அவருடைய படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைகிறது என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement