தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வீர தீர சூரன் 2. இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படம் HR Pictures தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் எஸ். ஜே சூர்யா காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். இவர் தன்னுடைய பழைய பகையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ரவி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையுமே என்கவுண்டர் செய்ய திட்டம் போடுகிறார். பெரிய தாதாவாக ரவி இருக்கிறார். இவருடைய மகன் தான் கண்ணன். ரவி தன் மகன் கண்ணனை இவரை எப்படியாவது எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று விக்ரமிடம் உதவி கேட்கிறார்.
விக்ரமை வைத்து எஸ்.ஜே சூர்யாவை கொன்று விட்டால் தன்னுடைய மகனை காப்பாற்றி விடலாம் என்று தாதா ரவி நினைக்கிறார். விக்ரமும் இது தெரியாமல் ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? விக்ரம் எதற்காக தாதா ரவி சொன்னதற்கு ஒத்துக்கொண்டார்? எஸ்.ஜே சூர்யா ஏன் ரவி மற்றும் கண்ணனை கொல்ல நினைக்கிறார்? இவர்களுடைய பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதிக்கதை.
படத்தின் நாயகன் விக்ரம் தன்னுடைய நடிப்பில் சிறப்பாக ஸ்கோர் செய்து இருக்கிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் விக்ரம் நடிப்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். எமோஷன், ஆக்சன் என அனைத்து காட்சிகளிலுமே தூள் கிளப்பி இருக்கிறார். அதோடு விக்ரம் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் வெறித்தனமாக நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்கும் வகையில் விக்ரம் நடித்திருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். தன் கணவருக்கு ஆபத்து என்றால் ஒரு பெண்மணியாக பட்டையை கிளப்பி இருக்கிறார் துஷாரா விஜயன். இவர் அடுத்து போலீஸ் அதிகாரியாக வரும் எஸ்.ஜே சூர்யா சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். இவருடைய டைமிங், ஆக்டிங் எல்லாம் வேற லெவல் இருக்கிறது. இவர்களை அடுத்து தமிழ் சினிமாவிற்கு புதுவராக மலையாள நடிகர் சுராஜ் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் இவர் பட்டையை கிளப்பினாலும் தமிழில் இதுதான் முதல் படம். இருந்தாலுமே தனக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார். இருந்தாலும் இவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பாக காண்பித்து இருக்கலாம். இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே நன்றாக இருக்கிறது. இயக்குனர் எடுத்துக்கொண்ட கதைகளம் அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், அதைச் சொல்லும் விஷயத்தை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கலாம்.
மாஸ் சீன்கள் எல்லாம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். மேலும், படத்திற்கு பக்கபலமே ஜி.வி பிரகாஷினுடைய பின்னணி இசை, ஒளிப்பதிவு தான். பார்வையாளர்களை அடுத்து என்ன என்றுயோசிக்க வைக்கும் அளவிற்கு பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். படத்தில் பெரிதாக குறைகள் இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தாக வீர தீர சூரன் படம் அமைந்திருக்கிறது.
நிறை:
விக்ரம் பட்டைய கிளப்பி இருக்கிறார்.
துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது
சண்டை, எமோஷனல் காட்சிகள் நன்றாக இருக்கிறது
இரண்டாம் பாதி சூப்பர்
கிளைமாக்ஸ் அருமை
கதைக்களம் நன்றாக இருக்கிறது
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்க்கு மிகப்பெரிய பலம்
குறை:
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய குறைகள் எதுவும் இல்லை
மொத்தத்தில் வீர தீர சூரன் 2 – ரசிகர்களுக்கு நல்ல விருந்து