தனது மகளை பிரிந்து வாழும் வீரம் பட நடிகர்.! அவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காங்களா.!

0
554
veeram

அன்பு படம் மூலம் ஹீரோவானவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி. தமிழில் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு மலையாள திரையுலகம் பக்கம் சென்ற அவர் கிட்டத்தட்ட அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

தமிழில் பட வாய்ப்புகள் குறையவே இவரது அண்ணன் சிவா, அஜித் நடித்த ‘வீரம்’ படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பை கொடுத்தார். அந்தப்படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார் பாலா. வீரம் படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

பாலாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு அம்ருத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அம்ருதா மலையாளத்தில் நடைபெற்ற ஐடியா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

குழந்தை பிறந்த சில ஆண்டுகளிலேயே பாலுவும், அம்ருதாவும் பிரிந்து விட்டனர். தற்போது பாலாவின் மகள் அவந்திகாவிற்கு 6 வயது நிறைவடைந்துள்ளது. சம்பத்தில் தனது பிறந்தநாளை தனது அம்மாவுடன் மட்டும் கொண்டாடியுள்ளார் அவந்திகா.!