நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த ஜெய்யின் வீரபாண்டியபுரம் படம் எப்படி ? முழு இதோ விமர்சனம் இதோ.

0
686
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள மிக பிரபலமான இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். கடைசியாக இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன் ‘ திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வெளியாகி உள்ள படம் வீரபாண்டியபுரம். இந்த படத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக நடிகர் ஜெய் அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஜெய்யின் நடிப்பில் வெளியாகியுள்ள வீரபாண்டியபுரம் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா?இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் கதாநாயகி மீனாட்சி. இவருக்கும் கதாநாயகன் ஜெயிக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது. இந்த காதல் இருவீட்டார் பெற்றோர்களுக்கும் தெரிகிறது. ஆனால், இரு வீட்டு பெற்றோர்களும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் திருமணம் வரை செல்கிறது. பிறகு தாலி கட்டும் கடைசி நேரத்தில் ஜெய் மனம் மாறி நாயகி மீனாட்சியை அவர் தந்தை சரத்திடம் திருமணத்திற்காக சமரசம் பேசுகிறார். இன்னொரு பக்கம் நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் குடும்பத்திற்கும் தீராத பகை இருக்கிறது.

- Advertisement -

இரண்டு குடும்பத்திற்கும் உள்ள பகை என்ன என்று தெரியவில்லை? இதனால் ஜெய்க்கு என்ன சம்பந்தம்? இறுதியில் நின்றுபோன இவர்கள் திருமணம் நடந்ததா? சரத் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தாரா? இரண்டு குடும்பத்திற்கு தீராத பகை இருக்க காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் ஜெய் அவர்கள் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் ஆரம்பத்தில் அமைதியான கிராமத்து இளைஞராக வந்த ஜெய் சண்டைக் காட்சிகளில் பயங்கரமாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

நடிகர்கள் கதாபாத்திரம்:

ஜெயின் தோற்றம் அப்படியே சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை ஞாபகப்படுத்துகிறது. மேலும், கதாநாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜ் அழகாக வந்து தன்னுடைய எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவர் மட்டுமில்லாமல் படத்தில் இன்னொரு கதாநாயகியும் வருகிறார். அவர் அகன்ஷா சிங். இவரும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். படத்தில் இரண்டு கதாநாயகிகளுக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். நகைச்சுவை கதாபாத்திரத்தில் பாலசரவணன் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சுசீந்திரன் இயக்கிய படங்கள்:

இவர் சில இடங்களில் மட்டும் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் ஆகியோர் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பக்க பலமாக இருந்து இருக்கிறார்கள். மேலும், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஜீவா போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சுசீந்திரன் தானா? இந்த படத்தை இயக்கி இருக்கிறார் என்று பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் சுசீந்திரன் கதை:

ஏனென்றால், தமிழ் சினிமாவில் ஏற்கனவே பலமுறை பார்த்து சலித்த படத்தை தூசி தட்டி மீண்டும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை மெதுவாகவே சென்று கொண்டிருக்கின்றது. அதோடு கதையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத வழக்கமான காதல் கதை, பெற்றோர்கள் பிரச்சனை பின் திருமணம் என்று கொண்டு செல்வதால் எந்த ஒரு சுவாரசியம் இல்லை. அதுமட்டுமில்லாமல் நகைச்சுவை காட்சிகளும் மக்கள் மனதில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

படத்தின் இறுதி முடிவு:

வழக்கமாக பேசிக்கொள்ளும் நகைச்சுவை காமெடிகள் மட்டும் தான் இருக்கிறது. இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஜெய் களமிறங்கி இருப்பது பாராட்டுக்கள் தவிர பாடல்கள் ஒன்றும் ரசிகர்களை கவரவில்லை. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வித்தியாசமான காட்சிகள், கதையம்சமும் இல்லை. சுப்பிரமணியபுரத்தில் வந்த அளவிற்கு இந்த படத்தில் இல்லை என்று தான் சொல்லணும்.

பிளஸ்:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் மூலம் ஜெய் இசை அமைப்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.

மைனஸ்:

வழக்கமான கதையைத்தான் இயக்குனர் தூசி தட்டி கொடுத்து இருக்கிறார்.

பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சுசீந்திரன் படமாக இது என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருக்கிறது.

இசையமைப்பாளராக ஜெய் அறிமுகம் ஆனாலும் அவருடைய இசை எதுவும் ரசிகர்களை அதிகம் கவரவில்லை.

கதை, திரைக்கதை அழுத்தமும் வித்தியாசமும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை மெதுவாக சென்று கொண்டிருக்கிறது.

சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நகைச்சுவை காட்சிகள் எதுவுமே இல்லை.

இறுதி அலசல்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெய்யின் வீரபாண்டியபுரம் வெளியாகியிருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் சென்ற ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம் தான். காசு கொடுத்து பார்த்த ரசிகர்களுக்கு நஷ்டம் என்றே சொல்லலாம். சுசீந்திரனின் பல வெற்றி படங்களில் இந்த படம் ஒரு சுமாரான படைப்பு தான் என்று சொல்லலாம்.

மொத்தத்தில் வீரபாண்டியபுரம் – வீரம் குறைவு.

Advertisement