-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

என்னை பெருமைப்படுத்தியது எதிர்நீச்சல் ஆனால், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வேல ராமமூர்த்தி

0
172

எதிர்நீச்சல் சீரியல் தொடர்பாக வெளிவந்த சர்ச்சைக்கு வேல ராமமூர்த்தி கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் வேல ராமமூர்த்தி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் நிறைய நாவல், கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அதிலும் இவருடைய ‘குற்றப்பரம்பரை’ நாவல் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

தற்போது இந்த நாவலை திரைப்படம் ஆக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். மேலும், இவர் சமீபத்தில் முடிந்த எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக மிரட்டி இருந்தார். இவர் சீரியலில் நடித்தாலும் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருந்தது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று இருந்தது. மேலும், இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் முதலில் மறந்த நடிகர் மாரிமுத்து தான் நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் திடீரென்று இறந்துவிட்டார். பின் அவருக்கு பதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்து இருந்தார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.இதை அடுத்து எதிர்நீச்சல் சீரியல் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் வேல ராமமூர்த்தி, இந்த சீரியலில் ஏன் நடித்தோம் என்று எனக்கு இருந்தது. இந்த சீரியலில் நடித்ததை பெரிய அவமானமாக நான் பார்க்கிறேன். காரணம், ரசிகர்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை.

வேல ராமமூர்த்தி பேட்டி:

-விளம்பரம்-

ரொம்ப நெக்டிவான கதாபாத்திரம் என்று வேதனையில் கூறியிருந்தார். இப்படி இவர் கூறி இருந்தது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக வேலராமமூர்த்தி பேட்டியில், யூடியூப் சேனல்களில் எந்த அடிப்படையில் இந்த மாதிரியான செய்திகளை போடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஏன் இப்படி பண்றாங்கன்னு புரியவில்லை. நான் இதுவரைக்கும் சீரியல் முடிந்து யாருக்குமே பேட்டி கொடுக்கவில்லை. எந்த இடத்திலும் எதிர்நீச்சல் சீரியலை பற்றி பேசவும் இல்லை. இந்த மாதிரி பொய்யான செய்திகளை பரப்புவது ரொம்ப தவறு. இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி எப்படி வைப்பது புரியவில்லை.

-விளம்பரம்-

எதிர்நீச்சல் தொடர்பான சர்ச்சை:

இதை நான் மட்டும் இல்லை பல பேர் எதிர் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னுடைய இத்தனை வருட சினிமா வாழ்வில் விமர்சனத்திற்கு ஆளாகாத நபர். இதெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. என்னை உலகம் முழுவதும் கொண்டு போனது எதிர்நீச்சல் சீரியல் தான். சினிமாவில் இருந்ததை விட இந்த சீரியல் மூலம் தான் நான் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானேன். என்னை பெருமைப்படுத்தியது எதிர்நீச்சல் சீரியல். ஏதோ பொறாமை, கால் புணர்ச்சியில் இந்த மாதிரி எல்லாம் வேலை செய்கிறார்கள். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்ததால் தான் தொடரில் நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்தது. திருசெல்வம் என்னை சந்தித்து அப்பா, பிள்ளை உறவு போல் பேசி இருந்தார். அதற்காகத்தான் நான் நடிக்க ஒத்துக் கொண்டேன்.

சீரியல் அனுபவம்:

நான் அந்த கதாபாத்திரத்துக்கு 100% உழைப்பு கொடுத்தேன். மக்கள் என்னை ஏற்றுக் கொண்டு கொண்டாடுறாங்க. அதேபோல் நான் ஒரு வாரத்திற்கு 10 லிருந்து 12 லட்சம் சம்பளம் வாங்கறதா எழுதுகிறார்கள். அடிப்படை அறிவு இல்லாமல் எப்படி இப்படி எழுதுகிறார்கள்? என்று புரியவில்லை. எல்லோருக்குமே எபிசோட் தான் சம்பளம் தருவார்கள். அதுவும் அத்தனை லட்சம் என்னால் வாங்க முடியுமா? கண்டிப்பாக நல்ல கதைக்களம் அமைந்தால் சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். மேலும், தமிழ் குடிமகன் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய புகைப்படங்களை அந்த செய்தியோடு சோசியல் மீடியாவில் பதிவிட்டு வைரலாக்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news