ரசிகர்களை அவமதித்த சர்ச்சையில் நாகர்ஜுனாவை தொடர்ந்து தனுசு சிக்கி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் நாகர்ஜுனா ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. தற்போதும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு நாகர்ஜுனா அவர்கள் ஏர்போர்ட் வந்திருந்தார். அப்போது அவர் அருகில் ரசிகர் ஒருவர் போட்டோ எடுக்க சென்றிருக்கிறார். உடனே நாகார்ஜுனாவின் பாதுகாவலர் அவரைத் தள்ளிவிட்டு இருக்கிறார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாகர்ஜுனா அமைதியாக வந்துவிட்டார். அந்த வீடியோ தான் இணையத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது.
நாகார்ஜுனா வீடியோ:
அதை பார்த்த பலருமே, நாகர்ஜுனாவை கண்டித்து இப்படியெல்லாம் நடந்து கொள்வதா? என்று திட்டியும் இருந்தார்கள். அதற்கு பின் நாகர்ஜுனா, நான் அதை கவனிக்கவில்லை. இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தனுஷை நெட்டிசன்கள் திட்டி வரும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் வீடியோ:
அதாவது, நேற்று ஜுஹு பீச்சில் சூட்டிங்க்காக தனுஷ் வந்திருந்தார். அவர் நடந்து வரும் போது ரசிகர்கள் போனில் அவரை போட்டோ எடுக்க முயன்று இருந்தார்கள். அப்போது தனுஷுடன் இருந்த பாதுகாவலர்கள் அவர்களை தள்ளிவிட்டு இருக்கிறார்கள். அதை தனுஷும் கண்டுகொள்ளாமல் சென்றிருந்தார். இந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து திட்டி வருகிறார்கள்.
This just came to my notice … this shouldn’t have happened!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) June 23, 2024
I apologise to the gentleman 🙏and will take necessary precautions that it will not happen in the future !! https://t.co/d8bsIgxfI8
நெட்டிசன்கள் கண்டனம்:
பொது இடத்தில் சூட்டிங் நடந்தால் மக்களை இப்படித்தான் நடத்துவீர்களா? உங்கள் மீது இருக்கும் பிரியத்தில் தானே வருகிறார்கள். ஏன் இப்படி எல்லாம் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள் என்றெல்லாம் கண்டித்து வருகிறார்கள். இதற்கு தனுஷ் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.