ஜல்லிக்கட்ட நிறுத்துங்க , எந்த மாட்டுக்காரனாவது இப்படி பன்னுவானா – நடிகர் வேல ராமமூர்த்தி ஆவேசம். நியாயமான காரணம் தான்.

0
726
VelaRamamoorthy
- Advertisement -

தை மாதம் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு புகழ் போன மதுரை அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இதனால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் தமிழக அரசும் பல நெறிமுறைகளை விதித்திருக்கிறது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டியில் 300 வீரர்களும், 150 பார்வையாளர்கள் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதாலும், மூன்றாம் அலையின் பரவல் அதிகரித்து வருவதாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டிருக்க வேண்டும்.

-விளம்பரம்-

மேலும், போட்டி நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கோரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏன்னா, கடந்த வாரம் மட்டும் குறைவினால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அரசாங்கம் பொங்கல் பண்டிகையில் இருந்து தீவிரமாக விதிமுறைகளை விதித்து வருகிறது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், காளைகளின் உரிமையாளர்கள் என அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

- Advertisement -

நடிகர் வேல ராமமூர்த்தி அளித்த பேட்டி:

இந்த நிலையில் நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பது, தமிழகத்தின் பாரம்பரியத்தையும் குறிப்பாக தென் பகுதியான மதுரையில் கலாச்சாரத்தையும் சொல்லும் திருவிழாவாக ஜல்லிக்கட்டு இருக்கிறது. தை மாதம் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, அடுத்த நாள் பாலமேடு, அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

150 பேருக்கு எந்த மாட்டுக்காரன் வருவான்:

இந்த கலாச்சார திருவிழாவை கொரோனா காரணம் காட்டி தடை செய்து இருக்கலாம். கொரோனா தீவிரமாக பரவி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜல்லிக்கட்டு தடைசெய்ய வேண்டும். இது 10 பேர், 100 பேர் பார்க்கக்கூடிய திருவிழா இல்லை. ஆயிரக்கணக்கான பேர் பார்க்கக்கூடிய திருவிழா. மக்களுடைய அத்தனை சந்தோசத்திற்கும் இந்த திருவிழா தான் காரணம். ஆனால், இந்த அரசாங்கம் என்ன செய்துள்ளது? வெறும்150 பேருக்கு மட்டும் அனுமதி அளித்து இருக்கிறார்கள். 150 பேருக்கு எந்த மாட்டுக்காரன் ஆவது காளையை அவிழ்த்து விடுவானா? அந்த 150 பேர் யார்? அந்த 150 பேரை எப்படி தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்? இது ஒரு தேவையில்லாத காரியமாக இருக்கிறது. தற்போது நல்ல அரசாங்கம் தான் இருக்கின்றது.

-விளம்பரம்-

ஜல்லிக்கட்டு போலீஸ்காரருக்கு நடக்கிறதா:

முதல்வரும், அத்தனை அதிகாரிகளும், அமைச்சர்களும் எல்லாருமே முற்போக்கான ஆட்கள் தான் இருக்கிறார்கள். ஆனால், இருந்தும் இந்த ஜல்லிக்கட்டு விஷயத்தில் இவர்கள் முடிவெடுத்திருப்பது சரியாக தெரியவில்லை. கொரோனா காரணம் காட்டி ஜல்லிக்கட்டை தாராளமாக நிறுத்தலாம். 150 பேர் தான் அனுமதி என்றால் மாடு பிடிக்கவே 150 பேர் வருவார்கள். அப்ப பார்வையாளர்கள் எத்தனை பேர்? அறிவார்ந்த முதல்வரும், அமைச்சர்கள், அதிகாரிகள் இருக்கின்ற அரசாங்கம் இவ்வாறு முடிவு எடுக்கலாமா? அங்கு காவல் அதிகாரிகளே 150 பேருக்கு மேல் வருவார்கள். ஜல்லிக்கட்டு போலீஸ்காரருக்கு நடக்கிறதா? மேடையில் இருக்கின்ற அதிகாரிகளுக்கு நடத்துவதா?

என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' -  ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி | Actor vela ramamoorthy ...

ஜல்லிக்கட்டு திருவிழா விளக்கம்:

ஜல்லிக்கட்டு திருவிழா என்பது தமிழகத்தினுடைய திருவிழா. தீபாவளி என்பது அகில இந்திய அளவில் எல்லோரும் கொண்டாடக்கூடிய பண்டிகை. ஆனால், தைப்பொங்கல் என்பது தமிழ்நாட்டில் குறிப்பாக தென்மாவட்டங்களில் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு கொண்டாடுகிற பண்டிகை. ஜே ஜே என்று இந்த திருவிழாவை மக்கள் கொண்டாடுவார்கள். இப்படிப்பட்ட ஒரு குதூகலமான விழாவை 150 பேர் தான் பார்க்கலாம் என்றால் என்ன அர்த்தம்? இது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை என்று ஆவேசமாக பேட்டி அளித்திருந்தார். இப்படி இவர் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement