விஐபி படத்தில் இப்படி ஒரு சென்டிமென்ட் காட்சியில் இருக்கும் இந்த தவறை நோட் செஞ்சி இருக்கீங்களா.

0
7468
VIp

தனுஷ் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “வேலையில்லா பட்டதாரி”. இந்த படத்தை எழுதி, இயக்கியவர் வேல்ராஜ் ஆவார். அதுமட்டுமில்லாமல் இந்த படமே இவர் இயக்கிய முதல் படம் ஆகும்.அதோடு இவர் இயக்கிய முதல் படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன்,அமிதேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தை தனுஷ் அவர்கள் தான் தயாரித்தது உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தனுஷின் 25 வது படமாக வேலையில்லா பட்டதாரி அமைந்தது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பைப் பெற்றது. அதோடு இந்த படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல பெயரை வாங்கியது. இந்த படத்தில் சமுத்திரகனி, அமலா பால், விவேக், சரண்யா பொன்வண்ணன் போன்ற பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு பெரிதும் கவர்ந்தது.

- Advertisement -

இந்த படத்தில் தனுஷுக்கு சரண்யா பொன்வண்ணனுக்கும் இருக்கும் இடையிலான காட்சிகள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது. அதிலும், இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன் இறக்கும் காட்சியின் போது இடம்பெறும் அம்மா அம்மா பாடல் காட்சி அனைவரையும் கவர்ந்தது. ஆனால், இப்படி ஒரு சென்டிமெண்டான காட்சியில் இருக்கும் தவறை பலரும் கவனிக்க மறந்திருக்கலாம்.

சுவரில் சாயும் முன் இருந்த ஷூ மீண்டும் இல்லை . பின்னர் மீண்டும் தரையில் அமரும் போது ஷூ இருக்கிறது.

அந்த காட்சியில் தனுஷ் முதலில் வீட்டிற்குள் நுழையும் போது காலில் ஷூ அணிந்து இருப்பார். பின்னர் தனது அம்மாவின் உடலை பார்த்ததும் சுவரில் சாயும் போது அவரது காலில் ஷூ இருக்காது. அதன் பின்னர் மீண்டும் கீழே அமரும் போது மீண்டும் காலில் ஷூ இருக்கும் என்பதை நீங்கள் தெளிவாக பார்க்கலாம். இப்படி ஒரு செண்டிமெண்ட்டான கட்சியில் இப்படி ஒரு தவறை எப்படி மறந்தார்கள் என்பது தான் தெரியல.

-விளம்பரம்-
Advertisement