வேலைக்காரன் திரைவிமர்சனம் !

0
4626
velaikaran
- Advertisement -

சிவகார்த்திகேயன் ஹீரோவாக, நயன்தாரா ஹீரோயினாக பிரகாஷ் ராஜ், பகாத் பாஸில், சார்லி என ஒரு பட்டாளமே நடித்த படம். முன்னர் வந்த 9 படங்ககையும் ஹிட் கொடுத்த சிவாவின் 10ஆவது படம் இது.

sivakarthikeyan

- Advertisement -

வழக்கமான சிவகார்த்திகேயன் படம் போல் இல்லாமல் இந்த படத்தில் மக்களுக்கான கருத்தினை கொண்டு வந்து சேர்ந்துள்ளார் சிவா. ஒரு சாதாரண மனிதனை பெருமுதலாளிகள் எப்படி தங்கள் வியாபாரத்திற்க்காக ஸ்மார்ட்டாக கையாளுக்கிறார்கள் என்று தெளிவாக கூறியுள்ள படம் வேலைக்காரன்.

சாதாரண மனிதர்கள் கூட இந்த படத்தைப் பார்த்தால் நம்மை வைத்து இவ்வளவு பெரிய வணிக அரசியல் நடக்கிறதா என ஆச்சரியப்பட்டுப் போவார்கள், அப்படியான படம் இது. குப்பத்தில் வளரும் சிவகார்த்திகேயனுக்கு இந்த பெரிய வணிக அரசியல் எப்படி நடக்கிறது என்பது தெரிந்து, மக்களுக்கு இந்த வணிக அரசியலின் பின்புலத்தையும் அதன் மீது ஒரு புரிதலையும் ஏற்ப்படுத்தவதே கதை.

velaikaran-movie

இதற்காக இயக்குனர் மோகன் ராஜா கடுமையாக உழைத்துள்ளது இந்த படத்தில் வரும் சில அற்புதமான காட்சிகள் மூலம் தெரிகிறது. வில்லனாக பிரகாஷ் ராஜும், சிவாவுக்கு உதவும் கேரக்டரில் க்ளாசாக பகாத் பாஸிலும் கலக்கியுள்ளனர். நயன்தாராவிற்கு படத்தில் பெரிய ரோல் இல்லை.

அனிருத்தின் இசை பெரிதாக சோபிக்கவில்லை, படம் சற்று இழுத்துக்கொண்டே போகிறது. சூப்பர் மார்க்கெட் குறித்து வரும் வசனம் அற்புதம். இடைவேளைக்கு முன்பு வரும் 15 நிமிடங்கள் அருமையாக உள்ளது. படத்தில் ஏராளாமான நடிகர் பட்டாளம் ஆனால் யாருடைய கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படி இல்லை. படத்தின் கரு மிக சிறந்தது. அத்தகைய கருவை வைத்துக்கொண்டு இன்னும் காட்சி அமைப்பை வலுப்படுத்தி இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் சிவகார்த்திகேயனும் பகாத் பாஸிலும் இறுதிவரை கதையை தாங்கிப்பிடிக்கின்றனர்.

கதையின் கருவிற்காகவும் சிவகார்த்திகேயனின் நடிப்பிற்காகவும் படத்தை ஒருமுறை பார்க்கலாம். இந்த படத்திற்கான எங்களுடைய ரேட்டிங் 2.5