பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள வெந்து தணிந்தது காடு நாயகி (சிம்பு பட நடிகைகள் எப்போதும் தரம் தான்)

0
11804
kayadu

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. சமீபத்தில் சிம்பு அவர்களின் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் சிலம்பரசன் அவர்கள் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்தில் கௌதம் மேனன், சிம்பு இணைகிறார்கள். இந்த படத்தில் பாடலாசிரியராக தாமரையும், இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அவர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ‌‌ மேலும், இந்த படம் சிலம்பரசனின் 47 வது படமாக உருவாகி வருகிறது.

Pin on Actress Bikini Pics

மேலும், இந்த படத்தில் சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்த படத்திற்கு நதிகளில் நீராடும் சூரியன் என பெயர் வைக்கப்பட்டது. பின்னர் வெந்து தணிந்தது காடு என மாற்றப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் கதாநாயகி குறித்து பல அப்டேட்கள் சோசியல் மீடியாவில் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதையும் பாருங்க : பார்வதி மூன்றாம் உலகிற்கு சென்ற நிலையில் இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா ?

- Advertisement -

இந்நிலையில் தற்போது சிம்புவுக்கு ஜோடியாக இந்த படத்தில் கன்னட நடிகை கயடு லோகர் என்பவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த ஒப்பந்தம் இதுவரை கையெழுத்து ஆகவில்லை என கூறப்படுகிறது. மேலும், கூடிய விரைவில் இந்த படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னட நடிகை கயடு லோகர் ஒரு மாடலாக தான் சினிமா உலகில் நுழைந்தார். தற்போது இவர் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். முகில்பேட், பதோம்பதம் நூட்டுண்டு போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement