பார்வதி மூன்றாம் உலகிற்கு சென்ற நிலையில் இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா ?

0
1086
Survivor
- Advertisement -

சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது போட்டியாளர் வெளியேறி இருக்கிறார். கடந்த வாரம் இந்திரஜா, ஸ்ருஷ்டி டாங்கே, காயத்ரி ஆகிய மூவர் ட்ரைபில் இருந்து வெளியேறிய நிலையில் கடந்த வாரம் அவர்கள் மூவரும் மூன்றாம் உலகிற்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த வாரம் இந்திரஜா இந்த மூவரில் சேப் ஆனதால் ஸ்ருஷ்டி டாங்கேவிற்கும் காயத்ரிக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-68-597x1024.jpg

இந்த டாஸ்கில் வெல்பவர்கள் இந்திரஜாவுடன் மோத வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் காயத்ரி மற்றும் ஸ்ருஷ்டி டாங்கேக்கு இடையிலான டாஸ்க்கில் காயத்ரி வெற்றி பெற்றதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக ஸ்ருஷ்டி டாங்கே வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்ரைபல் பஞ்சாயத்தில் வேடர்கள் வந்தனர்.

இதையும் பாருங்க : பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வரும் பானுப்பிரியாவின் தங்கை (அட, இந்த ராமராஜன் பட நடிகையா)

- Advertisement -

இதில் பார்வதி வெளியேற வேண்டும் என்று சக போட்டியாளர்கள் அனைவரும் வாக்களித்தனர். பார்வதி முதல் வாரத்திலேயே வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அவர் ட்ரைபில் இருந்து வெளியேற்றப்பட்டு மூன்றாம் உலகிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இந்திராஜா மற்றும் காயத்ரிக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்கில் தோற்பவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திரஜா இந்த டாஸ்கில் தோல்வியடைந்து இந்த நிகழ்ச்சியில் இருந்து இரண்டாம் போட்டியாளராக வெளியேறினார். தற்போது மூன்றாம் உலகத்தில் இருக்கும் பார்வதி மற்றும் காயத்ரிக்கு டாஸ்க் கொடுக்கப்படும். அதில் தோற்பவர்கள் தான் அடுத்த எலிமினேஷன். அது பார்வதியாக தான் இருக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

-விளம்பரம்-
Advertisement