தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவது குறித்து கேட்ட செய்தியாளருக்கு, வெங்கட் பிரபுவின் நச் பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து வருகிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது.
தற்போது நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடத்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என்ன பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
கோட் படம்:
மேலும் சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தினுடைய ஷூட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோட் படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. குறிப்பாக, கோட் படத்திலிருந்து வெளியான ‘ஸ்பார்க்’ என்ற மூன்றாவது பாடல் கடும் விமர்சனத்திற்கு உண்டானது. இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கோட் ட்ரெய்லர்:
ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே, நண்பா நண்பிஸ் என்னும் கோரிக்கையோடு விஜய் பாணியில் அமர்க்களப்படுத்தி உள்ளார்கள். ஏற்கனவே கிடைத்த தகவலின் படி இப்படத்தில், விஜய் SATZ ஏஜென்ட் ஆக நடித்திருக்கிறார். மேலும், ட்ரெய்லரில் பிரசாந்த் விஜயை அறிமுகப்படுத்துவது போல் காட்டி இருக்கிறார்கள். அதேபோல், மறைந்த நடிகர் விஜயகாந்த் இப்படத்தில் ஏஐ மூலம் வருவது போல் காட்சிகள் இருக்கிறது என்று சொன்ன நிலையில், அந்த காட்சிகள் எதுவும் ட்ரெய்லரில் இடம் பெறவில்லை.
செய்தியாளர் சந்திப்பு:
இந்நிலையில், கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின் பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு கோட் படம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் கூட படம் பண்ணி இருக்கீங்க, உங்க குடும்பத்தில் இருந்து அந்தக் கட்சியில் ஒரு எம்எல்ஏ வை எதிர்பார்க்கலாமா என்று கேட்டார். பத்திரிக்கையாளர் அப்படி கேட்ட உடனே, நடிகர் பிரேம்ஜி தனது கைகளை கூப்பி வணக்கம் வைத்து அரங்கத்தை சிரிக்க வைத்திருந்தார்.
Tamizhaga Makkal Kazhagam
— ÈAGLÈ (@SFC_EAGLE) August 17, 2024
😂😂😂😂😂😂😂😂😂😂
"Un thalaivan katchi per eh ozhunga solla therla nee enna kelvi keka vantiya"
-VP
Thug life moment 😂 irukura 4 fans um tharkuri ah irundha ennatha solrathu #Kanguva #GOATtrailer pic.twitter.com/qsoCarQNex
வெங்கட் பிரபு நச் பதில்:
பின் வெங்கட் பிரபு, எங்க குடும்பத்திலிருந்து யாராவது விஜய் சார் கட்சியில் இணைகிறோம் என்றால் அதை ஏன் நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். என் குடும்பத்தில் இருந்து நாங்க எந்த கட்சியில் வேணாலும் சேருவோம். அதை ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். உங்க வீட்டு பிரச்சனை ஏதாவது நான் கேட்கிறேனா. எங்க வீட்டு பிரச்சனையை மட்டும் ஏன் கேக்குறீங்க என்று தனது பாணியில் பதிலளித்தார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது