கோட் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் செய்தது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்தது.
லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கட் பிரபு கூறியிருக்கும் விஷயம் தான் வைரல் ஆகியுள்ளது.
வெங்கட் பிரபு பேட்டி:
அதாவது வெங்கட் பிரபு, பொதுவாகவே விஜய் சார் சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதுமே அமைதியாக இருப்பார் என்று தான் சொல்வார்கள். அவர் தன்னுடைய ஷாட் முடிந்த உடனே ஓரமாக போய் உட்கார்ந்து கொள்வார். யாரிடம் கூட அதிகம் பேச மாட்டார். இதைதான் பலருமே கூறியிருக்கிறார்கள். ஆனால், கோட் படத்தின் சூட்டிங்கிலும் அவர் அப்படியா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லுவேன். ஷூட்டிங்கில் விஜய் ரொம்பவே ஜாலியாக எல்லோரிடமும் கலாய்த்து பேசியிருந்தார்.
விஜய் குறித்து சொன்னது :
இதற்கு காரணம் நடிகர் பிரசாந்த் தான். விஜய் சார் அதிகம் bloopers கொடுத்ததற்கு பிரசாந்த் தான் காரணம். பிரசாந்த் கூட விஜயை கலாய்த்து பேசியிருக்கார். இருவருமே பயங்கரமாக கலாட்டா செய்து கொண்டிருப்பார்கள். அதே போல் விசில் போடு பாடலில் விஜயுடன் பிரசாந்தும் பிரமாதமாக நடனமாடி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். மேலும், நடிகர் விஜய் ‘கோட்’ படத்தை பார்த்து இயக்குனர் வெங்கட் பிரபுவை அணைத்துக் கொண்டு, கலக்கிட்டீங்க என்று சொல்லி இருக்கிறார்.
கோட் படம் குறித்த தகவல் :
அதை தொடர்ந்து விஜய், ‘நான் அவசரப்பட்டு ரிட்டயர்மென்ட் அறிவித்து விட்டேன். இன்னொரு படம் உன் கூட பண்ணியிருக்கலாம் என தோன்றுகிறது’ என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கோட் படத்தினுடைய முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குப் பின் விஜய்யின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மூன்றாவது பாடல் :
அதுமட்டுமில்லாமல் இந்தப் பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருக்கிறது. சமீபத்தில் கோட் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியிருந்தது. இப்பாடலுக்கு ‘ஸ்பார்க்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். கங்கை அமரன் எழுதிய இப்பாடலை யுவன் சங்கர் ராஜா, விருஷா பாலு இணைந்து பாடி இருக்கிறார்கள். இந்த பாடலில் விஜய் மிகவும் இளமை தோற்றத்தில் இருப்பது போல காட்டியிருந்தார்கள். இந்த பாடல் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.