நீங்க பண்ணதுலேயே மோசமான படம் இதான் – ரசிகரின் விமர்சனத்தை நேர்மையாக ஏற்றுக்கொண்ட வெங்கட் பிரபு (டைரக்டர்னா இப்படி இருக்கனும்)

0
798
Venkatprabu
- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கிய படங்களிலேயே மோசமான படம் என்று அவரே பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனருமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வெங்கட் பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை மட்டுமில்லாமல் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி,சென்னை 28-2 போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ் கூட இயக்கி இருக்கிறார். மேலும், சமீபத்தில் இவர் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

மாநாடு படம் பற்றிய தகவல்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. பல போராட்டங்கள், பிரச்சனைகளை கடந்து தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது அனைவருக்கும் தெரிந்தது. படத்தில் இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் சிம்புவை கொண்டாடி இருந்தார்கள். சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த சிம்புவிற்கு மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்திருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கிய படங்கள்:

இந்த படத்தை சுரேஷ் இயக்கி தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் டைம் லூப் என்ற ஒரு படத்தில் கான்செப்ட்டை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். அதோடு திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு இரண்டையுமே கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது வெளியாகி இருந்த படம் மன்மதலீலை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு தான் வெற்றியை கண்டது.

-விளம்பரம்-

ரசிகர் கேட்ட கேள்வி:

இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து இருக்கிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு அவர்கள் சினிமா உலகில் நுழைந்து 15 ஆண்டுகள் ஆகி விட்டது. இதை ஒட்டி இயக்கர் வெங்கட் பிரபு அவர்கள் நன்றி கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட்ஸ் போட்டிருந்தார்கள்.

வெங்கட் பிரபு பதிவு:

அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் இயக்கத்திலேயே மோசமான திரைப்படம் சூர்யாவின் மாஸ் தான்.
சூர்யா ரசிகனான எனக்கே அது பிடிக்கல என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த வெங்கட் பிரபு அவர்கள் கூறியிருப்பது, அடுத்த முறை சூர்யா அண்ணாவின் படத்தை இயக்கினால் உங்கள் எதிர்பார்ப்பை மொத்தமாக பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன். ஆனாலும், எனக்கு ரொம்ப பிடிச்ச படம் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது வெங்கட் பிரபு பதில் அளித்திருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement