எம்.ஜி.ஆர் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா ? இப்போ இவர் ரேஞ்சே வேற.

0
701
venkatprabu
- Advertisement -

பட்டியானாலும் சரி, சிட்டி ஆனாலும் சரி எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எம்ஜிஆர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டு இருந்திருந்தார். மேலும், அறிஞர் அண்ணா கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின் அதிமுக கட்சியை உருவாக்கி தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அரசியலில் சாதனை புரிந்தவர்.தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும், இறக்கும் வரை முதலமைச்சராகவும் இருந்து சென்றவர்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் தற்போது வரை இவரது பெயரை பயன்படுத்தி புகழ் தேடிக்கொண்ட பல நடிகர்கள் இறுகின்றனர். அந்த வகையில் எம் ஜி ஆர் மடியில் இருக்கும் இந்த பிரபலமும் எம் ஜி ஆரின் தீவிர ரசிகர் தான். அது வேறு யாரும் இல்லை இயக்குனர் வெங்கட் பிரபு தான். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் வெங்கட் பிரபுவும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளர்களில் ஒருவரான கங்கை அமரன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

நடிகர் To இயக்குனர் :

இயக்குனர் வெங்கட் பிரபு படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், பின்னணிப் பாடகர், திரைக்கதையாசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 2007ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘சென்னை 600028’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

வெற்றி படங்களின் இயக்குனர் :

அதனை தொடர்ந்து இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் வெங்கட் பிரபு எம் ஜி ஆருடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் வைரலாகி வரிறது.

-விளம்பரம்-

எம் ஜி ஆர் மடியில் வெங்கட் பிரபு :

அந்த புகைப்படத்தில் வெங்கட் பிரபு அவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருடன் அவரது மடியில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் நம்ம இயக்குனர் வெங்கட் பிரபுவா? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். மேலும், அந்த புகைப்படத்தை ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள். இறுதியாக வெங்கட் பிரபு சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி இருந்தார்.

மாநாடு படத்தை தொடர்ந்து Vpயின் அடுத்த படம் :

இந்த படம் மாபெரும் வெற்றியடைந்ததோடு சிம்புவிற்கு ஒரு நல்ல கம் பேக் படமாகவும் இருந்தது. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகர்ஜுனா மற்றும் பூஜா ஹேக்டேவை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படம் மாநாடு படத்தின் ரீ – மேக் என்று தான் முதலில் கூறப்பட்டது. ஆனால், இது மாநாடு படத்தின் ரீ – மேக் இல்லை, முற்றிலும் வேறு கதை.

Advertisement