‘அஸ்வின் செய்த சம்பவம்’ – சென்னை 28 வீடியோவை பகிர்ந்து வெங்கட் பிரபு போட்ட ட்வீட் படு வைரல்.

0
617
venkatprabu
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. வருணபகவான் ஆசிர்வாதத்துடன் ஓவருக்கு ஓவர் திரில்லர் திருப்பங்களுடன் கடைசி ஓவர் வரை அனல் தெறித்த அப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றி பெற்ற இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக்கோப்பையில் வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துப் பழி தீர்த்துத்துள்ளது. அப்போட்டியில்முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் போராடி 159/8 ரன்கள் சேர்த்தது.

-விளம்பரம்-

அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 4, ராகுல் 4, சூரியகுமார் 15, அக்சர் படேல் 2 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று திண்டாடிய இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கி விராட் கோலியுடன் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா வெற்றியை உறுதி செய்து கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் 40 (37) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே சிங்கிள் எடுக்க 3வது பந்தில் 2 ரன்களை விளாசிய விராட் கோலி 4வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார்.ஆனால் இடுப்பளவு வந்ததால் நோ பாலாக அறிவிக்கப்பட்டு மீண்டும் வீசப்பட்ட அந்த பந்தை மீண்டும் நவாஸ் ஒயிட் வீசினார். அதனால் மறுபடியும் வீசப்பட்ட அதே பந்தில் விராட் கோலி கிளீன் போல்டானாலும் ஃப்ரீ ஹிட் என்பதை பயன்படுத்திய இந்தியா 3 ரன்கள் எடுத்தது.

அதனால் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது மீண்டும் முஹமது நவாஸ் ஒய்ட் போல் வீசினார். அதில் ரன்கள் எடுக்க தவறியதுடன் கோட்டைவிட்ட தினேஷ் கார்த்திக் தேவையின்றி கிரீஸ் விட்டு வெளியேறி இக்கட்டான நேரத்தில் பொறுப்பின்றி ஸ்டம்பிங் முறையில் அவுட்டானது பரபரப்பையும் இந்தியாவுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியது. ஆனால் அப்போது களமிறங்கிய தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின் கிட்டத்தட்ட மீண்டும் அதே போல் வீசப்பட்ட கடைசி பந்தை எதுவுமே செய்யாமல் விட்டதால் மீண்டும் இந்தியாவுக்கு ஒயிட் கிடைத்து 1 ரன்னும் 1 எக்ஸ்ட்ரா பந்தும் கிடைத்தது.

-விளம்பரம்-

அதனால் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டபோது ஃபீல்டர்கள் உள்வட்டத்திற்கு உள்ளே வந்தாலும் அதற்காக அசராத அஷ்வின் மிட் ஆஃப் திசையில் தூக்கி அடித்து 20 ஓவரில் 160/6 ரன்களை எடுக்க வைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் சாமர்தியமாக செய்யப்பட்ட அஸ்வினை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடைசி பந்தில் வைட் வாங்கிய அஸ்வினின் செயலை வெங்கட் பிரபு படத்துடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் ஒரு காட்சியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையால் இம்ரான் என்ற ஒரு பேட்ஸ் மேன் அடிக்கடி நகர்ந்து வைட் வாங்கி கொண்டே இருப்பார். இப்படி ஒரு நிலையில் அஸ்வினின் செயலை அந்த படத்துடன் ஒப்பிட்டு பலர் பதிவுகளை போட்டு வர இதற்கு வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் அந்த குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்து நம்மை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement