மாநாடும் படம் பிடிக்கவில்லை என்று சொன்னவரை கேலி செய்து வீடியோ வெளியிட்ட பிரேம்ஜி – வெங்கட் பிரபுவின் பதிலை பாருங்க.

0
612
maanaadu
- Advertisement -

சிம்புவின் மாநாடு படத்தை மோசமாக விமர்சித்த நபருக்கு வெங்கட் பிரபு கூறிய பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்று உள்ளது. அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Silambarasan's 'Maanadu' first look motion poster is out | The News Minute

யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இல்லாத ஒரு புத்தம் புதிய வித்தியாசமான கதைக்களத்தில் சிம்பு அசத்தி இருக்கிறார். அதேமாதிரி எப்போதும் போல் இல்லாமல் வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படமாக்கியிருக்கிறார். படத்தில் அரசியல், மத கலவரத்தை எந்த அளவிற்கு ஆழமாக பிரச்சனை செய்யலாம் என்பதையும், டைம் லூப் கான்செப்ட்டையும் அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

- Advertisement -

மாநாடு படம் பற்றிய தகவல்:

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு பாமர மக்களுக்கும் புரியும் வகையில் படத்தில் தெளிவாக டைம் லூப் பயன்படுத்தப்பட்டது. இதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பலரும் கூறுகிறார்கள். இந்த நிலையில் மாநாடு படத்தை விமர்சனம் செய்த ரசிகர் உடைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தது,

மாநாடு படத்தை விமர்சித்த நபர்:

மாநாடு படத்தில் ஒரே காட்சி திரும்ப திரும்ப வருகிறது. நான் பார்த்த படங்களிலேயே மோசமான படம் மாநாடு தான். இந்த படம் டைம் லூப் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை என்று அப்பாவியாக பேசியிருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் இதைப் பார்த்து இயக்குனர் வெங்கட்பிரபு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அனைத்து விமர்சனங்களையும் நான் நேர்மறையாக ஏற்றுக்கொள்வேன்.

-விளம்பரம்-

விளக்கம் கொடுத்த வெங்கட் பிரபு:

அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் சரி. நாம பாக்காத விமர்சனங்களா! அடுத்த படம் இவருக்கு பிடிக்கிற மாதிரி புரியிற மாதிரி எடுக்க ட்ரை பண்ணுவேன் என்று கூறியிருந்தார். இவரின் இந்த பொறுமையான பதில் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். மேலும்,மாநாடு படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பார்ட்டி.

வெங்கட்டின் பார்ட்டி படம்:

இந்த படம் டி சிவாவின் தயாரிப்பில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜெய், சிவா, சந்திரன், சத்யராஜ், நாசர், நிவேதா பெத்துராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரேம்ஜி அமரன் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றன.

Advertisement