தமிழகத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் என தற்போது சீமான் வரை அனைவரும் திரைத்துரையை சேர்ந்தவர்களே.
அதே போல், தமிழ் திரையுலகின் உலக நாயகன் கமஹாசனும் அரசியலுக்கு வர அச்சாரம் போட்டு அறிவித்துவிட்டார். ரஜினி அரசியலுக்கு வருவார் என நமது தாத்தா காலம் முதல் தற்போது வாரிசுகள் வரை காலம் போய்விட்டது.
இன்னும் அவர் வந்தபாடில்லை. ஆனால், கமல்ஹாசன் அரசியல் பற்றி பொதுவாக பொதுமேடைகளில் பேசாத அவர் தற்போது அரசியலுக்கு வருவதென முடிவெடுத்துவிட்டார்.
ஆனால், தற்போது வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்.கே.நகர் படத்தின் டீசர் வெளியிட்ப்பட்டது. அந்த டீசரில் ‘நடிகன்னா உனக்கு ஓட்டு போற்றுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா? ‘ என ஒரு டைலாக் வருகிறது.
இந்த டைலாக் கமலை விமர்சிப்பது போல் உள்ளது என ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர். மேலும், கயல் பட நடிகர் சந்திரன் நேரடியாக ட்விட்டர் தளத்தில் இறங்கி, ‘உங்களிடம் நான் இதனை எதிர்பார்க்கவில்லை; என ட்வீட் செய்துள்ளார்.
மேலும், வெங்கட்பிரபு இன்று பிறந்த நாள் கொண்டாடும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனையும் விட்டு வைக்காத சந்திரன், ஒரு பக்கம் ஆர்.கே. நகர் பட டீசர் மற்றொரு பக்கம் கமலுக்கு வாழ்த்தா? எனவும் வெங்கட் பிரபுவை விமர்சித்துள்ளார்.