குக்கு வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணி – வெங்கடேஷ் பத்தின் உருக்கமான பதிவு.

0
457
mani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணமே கோமாளிகள் தான். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு. ‘நான் வரமாட்டேன்’ என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன்.

- Advertisement -

2019ல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்துகொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டிருக்கிறேன். குக் வித் கோமாளியின் உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்திருக்கிறேன்.

உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத அளவுக்கு அன்பு கிடைத்தது, அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த பதிவை கண்டு குக்கு வித் கோமளி ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமடைந்துள்ளார்கள். குக்கு வித் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் கடந்திருக்கிறது. ஆனால், கடந்த மூன்று சீசன்களை விட இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

குறிப்பாக இந்த சீசனில் முதல் எலிமினேஷன் ஆன கிஷோரின் எலிமினேஷன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த சீசனில் பாலா இல்லாததும் கொக்கு வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது மணிமேகலையும் வெளியேறி இருப்பது முக்கியத்துவம் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மணிமேகலையின் இந்த பதிவிற்கு வெங்கடேஷ் பட் கமன்ட் செய்துள்ளார்.

அதில் ‘மணி நீங்கள் சிறந்த பெண் கோமாலி மற்றும் நான் கண்ட சிறந்த மனிதர்களில் ஒருவர்… நீங்கள் ஒரு பிறவி நடிகராகவும் பொழுதுபோக்காளராகவும் இருக்கிறீர்கள்… நான் உங்களுடன் CWCயின் செட்களில் சிறந்த நேரத்தை அனுபவித்தேன். அழகான நினைவை என் வாழ்வின் மூலம் போற்றுகிறேன்…எப்போதும் நட்சத்திரமாக ஜொலித்து உங்கள் துறையில் சிகரத்தை அடைய வேண்டும் என்று பிரார்த்தித்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்…அனைத்து நல்வாழ்த்துக்களும் இருக்க இறைவனை ஆசிர்வதிப்பாராக, இப்போது போல அதே பணிவான மனிதனாக இருக்க மறக்காதே ‘ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement