தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களை கொடுத்து உள்ளார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளி வந்த “கென்னடி கிளப்” மற்றும் “சாம்பியன்” ஆகிய இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தன்னுடைய முதல் பட அனுபவத்தை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இயக்குனர் எழில் சார்கிட்ட அசிஸ்டென்ட்டாக இருந்தேன்.

அதற்கு பிறகு தான் வெண்ணிலா கபடிக்குழு படத்தை எடுக்க முடிவு செய்தேன். எல்லோரும் தயாரிப்பாளரைத் தேடி அலைவார்கள். ஆனால், எனக்கு தயாரிப்பாளரே தானா முன்வந்து படம் தயாரிக்கிறேன் என்று சொன்னார். அதனை தொடர்ந்து நான் நடிகர்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தேன். சூரி, அப்புக்குட்டினு எல்லோரும் எனக்கு பழக்கம். அவங்களை எல்லாம் இந்தப் படத்துக்குள் கொண்டு வந்தேன். ஹீரோ, ஹீரோயினைத் தவிர எல்லோரும் கன்ஃபார்மாகி விட்டார்கள். மேலும், ஹீரோ தேடல் ஆரம்பித்தது. இந்தக் கதையை முதலில் நான் ஜெய்கிட்ட தான் சொன்னேன். அவருக்காக நான் ரெண்டு மாதம் காத்திருந்தேன். ஆனால், அது ஒர்க் அவுட் ஆகலை.

இதையும் பாருங்க : அவர் என்ன சாப்பிடறாரு, எனக்கு மாதிரி உடல் வேணும் -ஜிம் மாஸ்டரிடம் கேட்டுள்ள அஜித்.

Advertisement

பிறகு நான் சாந்தனுவை நடிக்க வைக்க முடிவு செய்தேன். அப்போது தான் தயாரிப்பாளர் ஆனந்த் அவர்கள் விஷ்ணு விஷால் பற்றி சொன்னார். பின் நான் விஷ்ணு விஷாலை பார்த்ததுமே இவர் தான் இந்தக் கதைக்கு பொறுத்தமானவர் என்று நினைத்தேன். அப்போ விஷ்ணு பக்கா சிட்டி பையனாக இருந்தார். பின் தயாரிப்பாளர் விஷ்ணு படத்தில் இருந்தால் படத்துக்கு இன்னும் கொஞ்சம் ஃபைனான்ஸ் கிடைக்கும், பணப் பிரச்னை இருக்காது என்று சொல்லி அவர் என்னை சமாதானப்படுத்தினார். என்னடா இப்படி சொல்றார் என்று அதிர்ச்சியா இருந்தது. அந்தக் கேரக்டர்தான் படத்தை தாங்கணும். அது சரியில்லைனா, எல்லாமே சொதப்பிடும். முதல் படம் என்பதால் என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

எனக்குள்ளே பாசிட்டிவ் மைண்டோட சென்னை வந்து விஷ்ணுவை சந்திச்சேன். மாரிமுத்து கேரக்டர் எப்படி இருப்பார் என்று சொல்லிப் புரியவைத்தேன். கலரை குறைக்க தினமும் பீச் மண்ணில் படுக்க வைத்து உடம்பை குறைக்க வைத்து விஷ்ணுவை மாரிமுத்தாகவே மாத்தினோம். அடுத்து ஹீரோயின். முதல் சாய்ஸ் பிந்து மாதவி. நடிக்க `ஓகே’ சொல்லிட்டு அப்புறம் அவங்க ‘நோ’ என்று பதில் சொல்லி விட்டார்கள். அதற்கு பிறகு தான் சரண்யா மோகனை கமிட் பண்ணி நடிக்க வைத்தோம். இப்படி பல போராட்டங்களுக்கு பிறகு வெண்ணிலா கபடி குழு படம் வெளிவந்தது. நாங்கள் எதிர்பார்த்ததை விட படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது என்று கூறினார்.

Advertisement
Advertisement