நம்மை சிரிக்க வைத்த வெண்ணிற ஆடை மூர்த்தி 80 வயதாகி எப்படி இருக்கார் பாருங்க.!புகைப்படம் உள்ளே !

0
2208
Venniradai-Moorthy

தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் மூர்த்தி. இவர் 1965 ஆம் வெளியான “வெண்ணிற ஆடை” என்ற படத்தில் நடித்ததால் இவரை அனைவரும் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைத்து வந்தனர். சமீபத்தில் தனது 80 வது பிறந்தநாள் தனது குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார்.

moorthy

- Advertisement -

தமிழ் சினிமாவால் எம் ஜி ஆர் சிவாஜி காலம் துவங்கி இன்று விஜய் அஜித் காலம் வேறை மூன்று தலைமுறைகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த காமெடி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. தனது வித்யாசமான உடல் பாவனைகளாலும், இரட்டை மொழி வசனத்தினாலும் மக்கள் மத்தியில் இன்று வரை பிரபலமாக உள்ளார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்த இவர் 1965-ம் ஆண்டில் நடிகை மணிமாலாவை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தார்.பின்னர் இவர்கள் இருவரது பழக்கம் அதிகரிக்க இருவரும் காதலித்து 1970ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் தனது 80 வது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடிய வெண்ணிற ஆடை மூர்த்தி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Actor-venniradai
Actor-venniradai

இவரது பிறந்தநாளை ஒட்டி சில சினிமா பிரபலங்களும் வெண்ணிற ஆடை மூர்த்தியை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், இதுவரை 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளாள் இவர் உடல் நலம் ஒத்துபோகாததால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சினிமாவில் இருந்து ஒய்வு பெற்று விட்டார்

Advertisement