காவிரிக்காக போராடிய பிரபல இயக்குனர் மீது போலீஸ் தடியடி !

0
731
Director Vetri maaran

காவேரி மேலாண்மை அமைக்க கோரி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பதற்றமான சூழ்நிலை நிகழ்ந்து வருகிறது.இன்னும் சில மணி நேரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணி மோதவுள்ளது.ஆனால் காவேரி மேலாண்மை அமைக்ககோரி பல்வேறு கட்சிகள் மைதானத்தை சுற்றி போராட்டம் நடத்திவருத்திறது. தற்போது சீமானின் நாம் தமிழர் கட்சி,வாழ்வுரிமை கட்சி,விடுதலை சிறுத்தை கட்சி,கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போன்ற அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Vetrimaaran

மேலும் சினிமா துறை சார்பில் நடிகர் வெற்றிமாறன், அமீர், வைரமுத்து போன்றவர்கலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் ஏற்கனவே இயக்குனர் அமிரை கைது செய்த போலீசார் இயக்குனர் வெற்றிமாறன் மீது தடியடி தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.மேலும் போராட்டகார்களை கட்டு படுத்த முடியமல் போலீசார் திகைத்து வருகின்றனர். இருப்பினும் சென்னை மற்றும் கொல்கத்தா அணி வீரர்கள் ஏற்கனவே மைதானத்தினுள் பத்திரமாக அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர்.

போராட்ட காரர்கள் மைத்தானத்தை சுற்றி போராடி வருவதால் அண்ணா நகர் பகுதியை சுற்றி பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.மேலும் அதிரடி படையும் இன்னும் சில நேரங்களில் போராட்ட களத்தில் இறங்கிவிட போவதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.