விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழக அரசின் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்களை திறந்து செயல்படுத்தலாம் என்ற அரசின் உத்தரவால் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு சிறப்பு அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது.

இதையும் படியுங்க : விஜய்க்கு ஒரு நியாயம் சந்தானத்திற்க்கு ஒரு நியாயமா.! கொதித்த ரசிகர்களுக்கு சந்தானத்தின் பதில்.!

Advertisement

சமீபத்தில் தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், தியேட்டர் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும், 24 மணி நேரமும் திறந்து செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வணிகர்கள் தரப்பில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விதி திரையரங்கிற்கு பொருந்தும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை 24 மணி நேரமும் திரையிட போவதாக வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும், அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் தான் 24 மணி நேரமும் ஒளிபரப்பபடும் முதல் திரைப்படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆனால், திரையரங்குகளில் 24 மணி நேரமும் திரைப்படங்களை ஒளிபரப்புவது சாத்தியமில்லை என்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சங்கத்தில் தலைவர் அபிராமி கூறுகையில்’தமிழகத்தில் இந்த 24 மணி நேர சட்டத்தின் கீழ் வர்த்தக கடைகள் மற்றும் ஹோட்டல்கள் தான் திறந்திருக்கலாம், இந்த விதி திரையரங்குகளுக்கு பொருந்தாது என்றும், தமிழ் நாடு சினிமா விதிகளின்படி திரையரங்குகளில் 4 காட்சிகள் மட்டுமே அனுமதி உண்டு’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆனால், பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் சிறப்பு காட்சிகளையும் சேர்த்து 6 கும் பெறப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பபட்டு தான் வருகிறது. எனவே, நேர்கொண்ட பார்வை திரைப்படம் 24 மணி நேரமும் ஒளிபரப்புவதறகான வாய்ப்பும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement