விஜய்க்கு ஒரு நியாயம் சந்தானத்திற்க்கு ஒரு நியாயமா.! கொதித்த ரசிகர்களுக்கு சந்தானத்தின் பதில்.!

0
536

விஜய் நடித்த பல்வேறு படங்கள் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது தலைவா படம் தொடங்கி சமீபத்தில் வெளியான சர்க்கார் படம் வரை விஜய் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளார். இதில் இறுதியாக சர்க்கார் படத்தின் first look போஸ்டர் வெளியான போது அதில் விஜய் புகை பிடிப்பது போல போஸ் கொடுத்திருந்தார் அந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வரும் விஜய் புகைப்பிடிப்பதை ஊக்கப்படுத்துவது போன்று சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில் சந்தானம் நடித்துள்ள டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது.

இதையும் படியுங்க : பொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இல்லாமல் தனது கணவருடன் சென்ற பிரியங்கா சோப்ரா.!

அதில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றே சந்தானம் வாயில் சிகெரெட்டுடன் போஸ் கொடுத்திருந்தார். விஜய் நடித்த சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு மட்டும் எதிர்ப்புகள் வலுத்தது. ஆனால், நேற்று முன் தினம் சந்தானம் நடித்த ‘டகால்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் அவர் புகைபிடிப்பது போன்று உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அன்புமணி உள்பட பாமகவினர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனை சுட்டிக் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்கு பதில் கூறியுள்ள சந்தானம், டகால்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வேண்டுமென்றே யாரோ வெளியிட்டு விட்டனர். புகைபிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு என்பது எனக்கு தெரியும் அதனை ஒரு போதும் ஊக்கப்படுத்த மாட்டேன். இனி வரும் படங்களில் இது போன்ற காட்சிகள் இடம்பெறாமல் கவனமாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், சந்தானத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே சந்தானம் புகை பிடிக்கும் காட்சிக்கு பதிலாக அவரது கையில் ஒரு பழம் இருப்பது போல எடிட் செய்து அந்த போஸ்டரை வெளியிட்டனர் இருப்பினும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்தானம் புகைப்பிடிப்பது போன்ற வெளியான போஸ்டர் இன்னும் சமூகவலைதளத்தில் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது