சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் முத்து வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் மீனாவின் நகையை மனோஜ் யாருக்கும் தெரியாமல் விற்று விடுகிறார்.
இதை அறிந்த முத்து, அண்ணாமலை இடம் செல்கிறார். ஆனால், மனோஜ் – விஜயா இருவருமே நாங்கள் செய்யவில்லை என்று சமாளிக்கிறார்கள். எப்படியாவது மனோஜ் செய்த தில்லாலங்கடி வேலையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று முத்து திட்டம் போடுகிறார். முத்து விரித்த வலையில் மனோஜ் சிக்கிக் கொள்கிறார். இனி என்ன நடக்கும் என்று அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த்.
வெற்றி வசந்த் குறித்த தகவல்:
இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை போட்டிருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்கு பின் இவர் நிறைய ஷார்ட் பிலிம்யில் நடித்திருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு சின்னத்திரை நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்திருக்கிறது.
வெற்றி வசந்த் வீடியோ:
இந்த நிலையில் நடிகர் முத்து என்கிற வெற்றி வசந்த் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், எல்லோரும் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் ரொம்ப நன்றி. உங்களிடம் இருந்து கிடைக்கும் கமெண்ட்கள் எனக்கு ரொம்ப சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. அதேபோல் நான் எதற்கு இந்த வீடியோ போடுகிறேன் என்றால், இதற்கு முன்பு நான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாம் வைத்திருந்தேன்.
போலி ஐடி குறித்து சொன்னது:
அப்போது யாரோ ஒருவர் என்னுடைய ஐடியை தப்பாக பயன்படுத்துகிறார்கள் என்று தகவல் வந்தது. அதனால் பேஸ்புக்கில் இருந்து என்னுடைய முக்கியமான புகைப்படங்களை எடுத்து அந்த ஐடியை க்ளோஸ் செய்து விட்டேன். அதற்கு பிறகும் என்னுடைய பெயரில் ஐடியை ஓப்பன் பண்ணி மர்ம நபர்கள் யாரோ சிலர், தவறான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். என் பெயரை பயன்படுத்தி காசு கேட்பது, பெண்களிடம் தவறாக பேசுவது போன்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
வெற்றி வசந்த் சொன்ன அறிவுரை:
பலரும் நான் தான் என்று நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து யாரும் அதை நம்பாதீர்கள். எனக்கு பேஸ்புக்கில் அக்கவுண்ட் கிடையாது. இந்த மாதிரி தேவையில்லாத வேலைகளை செய்பவர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். இதை நான் ரொம்ப நாளாகவே சொல்லணும் என்று நினைத்தேன். இதை நீங்கள் உங்களுடைய நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.