பிக் பாஸ் பிரபலத்திற்கு டப்பிங் செய்துள்ள வெற்றிமாறன் – இப்போ இந்த வீடியோவ கேளுங்க உங்களுக்கே புரியும்.

0
662
vetrimaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் எல்லாம் வேற லெவல். தனுஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து இவர் தான் என்று சொல்லலாம். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். பின் வெற்றி மாறன் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.இந்த படத்திலேயே வெற்றி மாறனுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது.

இதையும் பாருங்க : ப்பா பிக் பாஸ் சுருதியா இது ? நீச்சல் உடையில் அவர் கொடுத்துள்ள போசை பாருங்க. வைரல் போட்டோ

- Advertisement -

இயக்குனர் ஆவதற்கு முன்பாக நடிகர் வெற்றி மாறன் கதிர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் வைரஸ் என்ற படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஸ்ரீதேவி விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். அதே போல வெற்றிமாறன் தான் இயக்கிய முதல் படமாக பொல்லாதவன் படத்தில் டப்பிங்கும் பேசி இருக்கிறார்.

ஆம் இந்த படத்தில் நடிகர் சென்ராயனுக்கு இயக்குனர் வெற்றிமாறன் தான் டப்பிங் பேசி இருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. அதே போல இவர் இயக்கிய ஆடுகளம் படத்தில் கிஷோரின் குரலுக்கு சமுத்திரக்கனியும், பேட்டைக்காரன் குரலுக்கு ராதாரவியும் தான் டப்பிங் பேசி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தகக்து.

-விளம்பரம்-
Advertisement