விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனினில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, சின்னத்தம்பி பவானி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.
மீதமுள்ள பல போட்டியாளர்கள் யார் என்பதே தெரியவில்லை. அந்த வகையில் மாடல் அழகியான சுருதியும் ஒருவர். சேலத்தை சேர்ந்த இவர் மாடலிங் செய்து வருகிறார். இவரது கருப்பான நிறம் காரணமாக இவர் ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார். இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாய் வளர்ப்பில் வளர்ந்த இவர் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சீட் வாங்கி சிறப்பாக படித்து பின்னர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
இதையும் பாருங்க : எப்போது வீடு திரும்புகிறார் கமல் ? டிஸ்சார்ஜ் குறித்து வெளியான தகவல் – இந்த வார பிக் பாஸில் கலந்துகொள்வாரா இல்லையா ?
அதன் பின்னர் வேறு வேலை தேடி சென்னை வந்தார். இவர் முதல் முதலில் ‘Darkess Divine ‘ என்ற ஒரு கான்சப்ட்டில் தமிழ் கடவுள் கருப்பாக இருப்பது போல போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அது மிகப்பெரிய வைரலானது. அதன் பின்னர் மிஸ் இந்தியா மிஸ் டிவா போன்ற பேஜென்ட் ஷோவில் இவர் பங்கேற்றுள்ளார்.
இவர் மாடல் அழகி என்பதால் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார். அந்த வகையில் இவர் நீச்சல் உடையில் நடத்திய போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஞாயிற்று கிழமை தான் சுருதி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.