தன் இன்ஸ்டிடியூட் சேர தேர்வு எழுதிய மாணவர்களை வெற்றிமாறன் எப்படி தேர்வு செய்கிறார் பாருங்க. வைரல் வீடியோ.

0
1593
vetrimaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். அதற்கு பின் தான் வெற்றி மாறன் இயக்குனராக களம் இறங்கினார். பெரும்பாலும் வெற்றிமாறன்– தனுஷ் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது.

-விளம்பரம்-
Film Producer-Director Vetri Maaran unveils PG Diploma Course in Filmmaking  for underprivileged - Navjeevan Express

மேலும், இவர் இயக்கிய ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வாங்கி இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன்- தனுஷ் காம்போவில் வெளிவந்த அசுரன் படத்திற்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்தது. மேலும், இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பாக நடிகர் வெற்றி மாறன் கதிர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் வைரஸ் என்ற படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்து இருந்தார்.

- Advertisement -

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பி

இது ஒரு பக்கம் இருக்க இவர் IIFC – இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிலிம் அண்ட் கல்ச்சர் என்ற சினிமா பள்ளியை நடத்தி வருகிறார். இதில் சேர வேண்டும் என்றால் பல நிபந்தனைகள் இருக்கிறது. இதில் சேரும் அனைவருக்கும் அட்மிஷன் பிரீ. இங்கு மொத்தமே 35-லிருந்து 40 சீட்டு மட்டும் தான் இருக்கிறது. மேலும், இதில் சேர தேவையான தகுதிகள்:

வெற்றிமாறன் பள்ளியில் சேர தேவைப்படுவது என்ன ?

  1. யுஜி படித்தவர்கள் அதாவது இளநிலை பட்டதாரி ஆக இருக்க வேண்டும்.
  2. அதேபோல் விஸ்காம் அல்லது மீடியா சம்பந்தப்பட்ட ஊடகத் துறையை இளநிலை பட்டதாரியாக இருக்க கூடாது. அதைத்தவிர வேறு ஏதாவது படித்திருக்கலாம்.
  3. வயது வரம்பு: 21-25க்குள் இருக்க வேண்டும். அதேபோல் இளநிலை படிப்பு 20 வயதில் முடித்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  4. தமிழ் பேசக்கூடிய தமிழகத்தை மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்களாக மட்டும் இருக்க வேண்டும். தமிழ் தெரியும் ஆனால், நாங்கள் ஆந்திரா, கேரளாவில் இருக்கிறோம் என்றால் அவர்களுக்கு வாய்ப்பு கிடையாது.
  5. இதை ஆன்லைன், ஆஃப்லைனில் என்று இரண்டு முறைகளில் அப்ளை பண்ணலாம்.

நேரில் சென்று பார்க்கும் வெற்றிமாறன் :

இப்படி ஒருவர் விண்ணப்பித்த பிறகு அவர்களை நேரில் வீட்டிற்கு சென்று அவர்களை பற்றியும், அவர்கள் வீட்டு சூழ்நிலை பற்றியும் தெரிந்த பிறகு தான் சினிமா படிப்பு படிக்க தேர்ந்து எடுப்பார்கள். அதோடு ஃபிலிம் இன்ஸ்டியூட் என்றாலே இலட்சக்கணக்கில் செலவாகும். அதனால் பல ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு போய் விடுகிறது என்பதை கருத்தில் கொண்டு தான் இதை வெற்றிமாறன் ஆரம்பித்து இருக்கிறார். இதில் ஏழையாக இருக்கும் திறமை மிக நபருக்கு தான் வாய்ப்பு அதிகம். இதையெல்லாம் பார்த்து தான் பிலிம் இன்ஸ்டியூட்டில் படிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

-விளம்பரம்-

தன் பள்ளி குறித்து வெற்றிமாறன் :

இங்கு சினிமா சம்பந்தப்பட்ட, சைக்காலஜி சம்பந்தப்பட்ட பல விஷயங்களை கற்றுத் தருகிறார்கள். இது ஒரு வருடப் படிப்பு அதாவது பிஜி கோர்ஸாக இருக்கும். இங்கே சேர்வதற்கு ஆண், பெண், திருநங்கை என்று எந்தவித பாலின வேறுபாடு கிடையாது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, பொதுவாகவே எல்லோரும் இன்ஸ்டியூட்டில் சேருவதற்கு தேடி வருவார்கள். ஆனால், நான் கொண்டு வந்திருக்கிற முறை இன்ஸ்டியூட்டில் படிப்பதற்கான மாணவர்களை வீடு தேடி சென்று அவர்களுக்கான சூழ்நிலையை தெரிந்து கொண்டு அதற்குபிறகு அவர்களை கண்டு வாய்ப்பு கொடுக்கிறோம்.

திறமை இருந்தால் மட்டுமே போதும் :

திறமையானவர்களுக்கு இந்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். இலட்சக்கணக்கிள்
செலவ செய்பவர்களுக்கு தான் இந்த வாய்ப்பு என்று பலரும் நம்பி இருந்தார்கள். ஆனால், அப்படி எந்த ஒன்றும் கிடையாது. பணம் இல்லை என்றாலும் திறமை இருந்து சாதிக்க முடியும் என்பவர்களுக்கான வாய்ப்பு என்று தான் நாங்கள் இந்த இன்ஸ்டியூட் தொடங்கினோம் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியா தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது வெற்றிமாறன் அவர்கள் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
பின் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற பிரமாண்ட படத்தை இயக்க உள்ளார். வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் வெற்றி பெற்ற வட சென்னை படத்தின் இரண்டாவது பாகத்தையும் வெற்றிமாறன் எடுக்க உள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி வெற்றிமாறன் இயக்கத்தில் கமல், சூர்யா, தனுஷ், விஜய் என தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் பெரிய நடிகர்களின் படங்களை இயக்க உள்ளார்.

Advertisement