வேட்டையாடு விளையாடு படத்திற்கு முதலில் வைத்த “Title” இதுதானாம்..!

0
2609
vettaiyaadu-vilaiyaadu
- Advertisement -

தமிழ் சினிமாவில் மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயரெடுத்தவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ எனும் படம் மாபெரும் ஹிட்டடித்தது.

-விளம்பரம்-

kamal

- Advertisement -

இந்த திரைப்படத்திற்கு முதன் முதலில் ‘தடையற தாக்க’ என்று தான் தலைப்பு வைப்பதாக இருந்ததாம். பொதுவாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது திரைப்படங்களுக்கு தலைப்பை தனது உதவி இயக்குனர்களுடன் கலந்துரையாடி தான் வைப்பார்.

அந்த வகையில் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் தலைப்பின் டிஸ்கசனின் போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனராக இருந்த மகிழ் திருமேனி “தடையற தாக்க” எனும் தலைப்பை கூறியுள்ளார். ஆனால், சில பல காரணங்களால் அந்த தலைப்பை மாற்றி ‘வேட்டையாடு விளையாடு’ என்று வைத்துள்ளனர்.

-விளம்பரம்-

vettaiyaadu vilaiyaadu

அதன் பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்கிய படத்திற்கு ‘தடையற தாக்க ‘ என்ற தலைப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார். தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘முன்தினம் பாத்தேனே ‘ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் மகிழ் திருமேனி. அதே போல நடிகர் ஆர்யா நடித்த ‘மீகாமன்’ படத்தையும் இவர் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement