ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் வேட்டையன்.
இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அமிதாபச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா, துஷாரா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக ஏற்பு ஏற்பட்டதற்கு காரணம் ஏற்கனவே சூர்யாவை வைத்து இயக்குனர் ஞானவேல் ஜெய் பீம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
வேட்டையன் படம்:
இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியையும் வெளிச்சம் போட்டு காட்டிய படம் தான் ஜெய் பீம். இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்களின் பாராட்டுகளை பெற்றனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.
முதல் நாள் வசூல்:
இருந்தாலும், இந்த படம் பல விருதுகளை அள்ளி குவித்து இருக்கிறது. இதனால் தான் வேட்டையன் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் நாள் வேட்டையன் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. முதல் நாளில் இந்த படம் உலக அளவில் 72 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி வசூல் செய்திருக்கிறது.
வேட்டையன் படத்தின் கதை:
இனிவரும் நாட்களில் வேட்டையன் வசூல் வேட்டையை தொடர்வாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக இருக்கிறார். எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் ரவுடிகளை சுட்டு தள்ளுகிறார். இன்னொரு பக்கம் நேர்மையான அரசு பள்ளி ஆசிரியராக துஷாரா விஜயன் இருக்கிறார். ஆனால், இவரை கொடூரமான முறையில் யாரோ ஒருவர் கொலை செய்து விடுகிறார்.
படம் குறித்த தகவல்:
அந்த வழக்கு ரஜினி இடம் விசாரணைக்கு வருகிறது. இன்னொரு பக்கம் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக பல வேலைகள் நடக்கிறது. இது தெரியாமல் ரஜினிகாந்த் கடைசி நேரத்தில் உள்ளே வந்து சம்பந்தமில்லாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமாக இருக்கும் அமிதாபச்சன் குழுவினரிடம் இந்த வழக்கு விசாரணைக்கு செல்கிறது. கடைசியில் உண்மையான குற்றவாளி யார்? துஷாரா விஜயனை கொலை செய்தவர்கள் யார்? ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்? ரஜினிகாந்துக்கு என்ன ஆனது? அமிதாப்பச்சனின் தீர்ப்பு என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.