தமிழில், 2006ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காதல் பரத், பாவனா, பசுபதி, என்று பல்வேறு பிரபல நடிகர்கள் நடித்த இந்த படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் பிரியாங்கா நாயர். பரத் மற்றும் பாவனா இருவருக்கும் இடையிலான காட்சிகளை விட இவர்கள் இருவரின் காட்சி தான் ரசிக்கும்படியாக இருந்தது என்றே கூறலாம்.
அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற உருகுதே மருகுதே என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை பிரியங்கா நாயர். இவர் 1985ஆம் ஆண்டு கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். கல்லூரியில் படித்துக்கொண்டு மாடலிங் செய்து வந்த பிரியங்கா, சில மலையாள சீரியல்களிலிம் நடித்து வந்தார். அதன்பின்னர் தனது 21 வயதில் வெயில் பட ஆடிஷனில் கலந்துகொண்டு தன் நடிப்பு திறமை மூலம் தேர்வானார் பிரியங்கா.
இதையும் பாருங்க : ஒற்றை காலில் யோகா போஸ், மாடர்ன் உடையில் போஸ். ரசிகர்களை புலம்ப வைத்த எரும சாணி ஹரிஜா.
பின்னர் 2006 ஆம் ஆண்டில் இவர் நடித்திருந்த வெளிவந்த வெயில் படம், அந்த ஆண்டின் சிறந்த படத்திற்காக தேசிய விருதையும், மாநில அரசின் விருதையும் பெற்றது. வெயில் திரைப்படத்துக்கு பின்னர் பிரியங்கா நாயர் தமிழில், தொல்லைபேசி, செங்காத்து பூமியிலே, போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்த அவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டிகு ஜோடியாக நடித்துள்ளார்.
தனது 27 வயதில் கடந்த 2012ஆம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பிறகு பிரியங்காவை நடிக்க வேண்டாம் என கணவர் கூறியதால், அவரை விவாகரத்து செய்து விட்டார். நீண்ட காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தற்போது “உற்றான்” என்ற படத்தில் கமலி என்ற கல்லூரி பேராசிரியை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதனை கண்ட ரசிகர்கள் வெயில் பட நடிகையா இது என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.