விடுதலை படத்தில் உசுர கொடுத்து நடித்த சூரிக்கு கொடுப்பட்ட சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

0
949
Viduthalai
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் விவேக், சந்தானத்திற்கு பிறகு காமெடியில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சீரியலில் தான் இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணில கபடி குழு படத்தின் மூலம் தான். அந்த படத்தில் இவர் புரோட்டா சாப்பிடுவதன் மூலம் தான் புரோட்டா சூரி என்றே பெயர் வந்தது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

விடுதலை பாகம் 1 :

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இயமைத்திருக்கிறார்.

விடுதலை முதல் நாள் வசூல் :

இந்நிலையில் இந்த படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே விடுதலைப் படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். அதோடு இப்படத்தின் அதிகார பூர்வ முதல் நாள் வசூல் சமீபாத்தில் வெளியாகியது அதன் படி தமிழ் நாட்டில் மட்டுமே 8 கோடி வசூல் செய்திருப்பதாகவும், உலகம் முழுவதும் சேர்த்து 12 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

-விளம்பரம்-

சூரி சம்பளம் :

இப்படியொரு நிலையில் பல கோடிகள் வசூல் செய்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக நடித்த புரோட்டா சூரியுடைய சம்பளம் பற்றிய தகவல் ஷோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. அதன் படி சூரி பல நாட்கள் நடித்து இந்த படம் நல்ல வசூலை தற்போது பெற்று வந்தாலும் இவருக்கு 30 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து கதாநாயகனாக நடிக்கும் படங்களில் இன்னமும் அதிகம் சம்பளம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement