41 வயதிலும் காலண்டருக்கு படு கிளாமர் போஸ் கொடுத்த நேர்கொண்ட பார்வை பட நடிகை.

0
29138
Vidhya-Balan

தற்போது உள்ள சினிமா உலகில் கவர்ச்சி காட்டாத நடிகை என்பது மிகவும் அரிதான விஷயமாக தான் இருந்து வருகிறது. அதிலும் பாலிவுட் என்றால் நடிகைகளில்கவர்ச்சிக்கு சொல்ல வேண்டியதே கிடையாது. பாலிவுட் சினிமாவை பொறுத்த வரை கவர்ச்சிக்கு வயது வித்தியாசம் என்பதே கிடையாது. அதற்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார் பாலிவுட்டின் பிரபல நடிகையான வித்யாபாலன். இந்தியில் பிரபல நடிகையான வித்யாபாலன். தனது 16 வயதில் இருந்தே நடித்து வருகிறார்.2003 ஆம் ஆண்டு பெங்காலி படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் இந்தியில் பல்வேறு முன்னணி நடிகர்கள் படத்தில் ஜோடியாக நடித்திருந்த வித்யாபாலன் தற்போது நடித்து வருகிறார். பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவர் பிரபலம் ஆனது என்னவோ கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தின் மூலம் தான். தமிழ் சினிமாவின் பிரபல கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து இருந்தார் வித்யாபாலன்.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘ஒரு பையன் எனக்கே இப்படின்னா’ ஓரினச்சேர்கையாளரால் நடந்த நிகழ்வை கூறிய ரக்ஷன்

இந்த படத்தில் சில்க் ஸ்மிதா போட்டியாக கவர்ச்சியை அள்ளி வீசி இருந்தார். மேலும் இவர் தமிழில் கடந்த 2019ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் இவர் தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய பிரபலமடைந்தார். தற்போது 41 வயதைக் கடந்த இவர் இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் போட்டியாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனால் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் இவர் பிரபல காலண்டரில் காக போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். அதில் உள்ளாடை தெரியும் அளவிற்கு படுகவர்ச்சியான ஆடைகளில் போஸ்களை கொடுத்து அசத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement