‘ஒரு பையன் எனக்கே இப்படின்னா’ ஓரினச்சேர்கையாளரால் நடந்த நிகழ்வை கூறிய ரக்ஷன்

0
19077
Rakshan
- Advertisement -

பொதுவாகவே பெண்களுக்கு ஆண்கள் காதல் தொந்தரவு கொடுப்பது, ஆண்களுக்கு பெண்கள் காதல் தொந்தரவு கொடுப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், சமீப காலமாக ஆண்கள் ஆண்களுக்கு காதல் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். இது ஒரு வினோதமான செயலாக இருக்கிறது. ஆமாங்க, சமீப காலமாகவே ஓரினச் சேர்க்கையாளர்கள் பொது இடங்களில் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். இது சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. எப்போதும் பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் தொந்தரவு தான் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வந்து இருந்தது. ஆனால், சமீப காலமாக ஆண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் தொந்தரவு பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-
Image result for Rakshan

- Advertisement -

ஓரினச் சேர்க்கையாளர்கள் பொது இடங்களில் ஆண்களின் அந்தரங்க பகுதிகளை தொடுவது, எல்லை மீறுவது, வன்மமாக பேசுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஆண்களையே தர்மசங்கடமான நிலைக்கு தள்ளுகிறார்கள். இந்த மாதிரியான நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது பல பேர் வாழ்க்கையில் நடந்து இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தற்போது பிரபல தொகுப்பாளர் ஒருவர் வாழ்க்கையிலும் இந்த மாதிரி ஓரினச் சேர்க்கையாளரால் ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. அது விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக உள்ள ரக்ஷன் வாழ்க்கையில் நடந்தது. ரக்ஷன் அவர்கள் முதலில் ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தார்.

இதையும் பாருங்க : இரவு 12 மணிக்கு என் கணவர் பேசிட்டு இருப்பாரு. மேடையில் போட்டுடைத்த நடிகை குஷ்பு.

-விளம்பரம்-

ஆனால், அவருக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது விஜய் டிவி தான். விஜய் டிவியில் இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார். விஜய் டிவி மூலம் தான் ரக்ஷன் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது துல்கர் சல்மான் நடித்து உள்ள ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தின் மூலமாக ரக்ஷன் வெள்ளித்திரையில் நடிகராக மாறி உள்ளார். இந்நிலையில் ரக்சன் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளரால் தனக்கு நேர்ந்த சம்பவத்தை குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியது, நான் ஷாட்ஸ்லாம் போட்டுக் கொண்டு ஜாலியாக நடந்து போகும் போது என்னை பார்த்து ஒருவர் சிரித்தார். நானும் சரி என்று என் வேலையை பார்த்தேன்.

வீடியோவை 5.40 நிமிடத்தில் இருந்து பார்க்கவும்:

பின் அவர் என்னை பின் தொடர ஆரம்பித்தார். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஒரு பையனுக்கே இந்த நிலைமையா?? என்று என் மனதுக்குள் தோன்றியது. அவர் எதற்காக என்னை பின் தொடர்கிறார் என்று எனக்கு புரிந்து விட்டது. ஒரு பையன் எனக்கே இப்படி இருக்கு என்றால் இது போல சூழலில் பெண்கள் இது போன்ற ஆட்களைப் பார்த்து எவ்வளவு பயந்து இருப்பார்கள். இந்த நிகழ்வின் மூலம் என்னால் பெண்களின் நிலைமை குறித்து நான் உணர்ந்தேன். பிறகு நான் அவரிடம் அந்த மாதிரி எல்லாம் நான் கிடையாது என்று கூறினேன். இப்படி இவர் கூறிய விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத காலத்தில் தற்போது ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லையா? என்று கேட்கும் அளவிற்கு சமூகம் மாறிக்கொண்டு வருகின்றது.

Advertisement