அப்புறமா டெலீட் செய்து விடுவேன். வித்யு ராமன் பதிவிட்ட புகைப்படம். வேண்டாம் என்று புலம்பும் ரசிகர்கள்.

0
73991
Vidhyu
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகளின் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். தமிழில் நீதானே என் பொன் வசந்தம், வீரம், வி எஸ் ஓ பி, ஜில்லா, மாஸ் போன்ற பல காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை வித்யூ ராமன். இவர், தமிழ் சினிமாவில் பிரபல குணசித்திர நடிகர் மோகன்ராமின் மகள் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

-விளம்பரம்-
View this post on Instagram

Felt ? might delete later

A post shared by Vidyu Raman (@vidyuraman) on

நீதானே என் பொன் வசந்தம் படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை. இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் தெலுங்கில் 6 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் பாருங்க : ஏன் இப்படி ஒல்லியா ஆகிடீங்க. திமிரு பட நடிகையின் கேள்விக்கு ஆதி கொடுத்த கிண்டலான பதில்

சினிமாவில் நடிக்க ஆரம்பமான நாள் முதலே வித்யூ ராமன் படு குண்டாக தான் இருந்தார். இதனால் அவர் பல்வேறு கிண்டலுக்கும் உள்ளானார். இந்த நிலையில் வித்யூ ராமன் தனது உடல் எடையை குறைக்க கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வந்தார். இதனால் முன்பை விட உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். வித்யூ ராமனின் இந்த முயற்சியை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் வித்யூ ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் மிகவும் தீயாக உணருகிறேன் பின்னர் டெலிட் செய்து விடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்டு பலரும் டெலிட் செய்ய வேண்டாம் என்று புலம்பி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கவர்ச்சியான ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைபடங்களை வெளிட்டார். அதற்கு பல்வேறு பாராட்டுக்களும் விமர்சனங்களும் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement