ஐஸ்வர்யா வெளியேறாமல் இருப்பதற்கு இதுதான் உண்மையான காரணமா..?

0
915
bigg-boss-aishwarya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிய் நேற்று எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யா காப்பாற்றபட்டுவிட்டார் என்ற செய்தி தன தற்போது பிக் பாஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய விவாதமாக இருந்து வருகிறது. ஐஸ்வர்யா காப்பாற்றபடத்திற்காக கமல் கூறிய காரணத்தை தான் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

-விளம்பரம்-

- Advertisement -

Aishwarya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வர நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ஜனனி, சென்ராயன், விஜயலக்ஷ்மி ஆகியோர் இருந்து வந்தனர். இத்தனை வாரங்கள் கழித்து மக்கள் எதிர்பார்த்தது போலவே ஐஸ்வர்யா நாமினேஷனில் வந்ததும் கண்டிப்பாக இந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேற போகிறார் என்று அனைவரும் அணித்தனமாக நம்பினர்.

-விளம்பரம்-

ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக நேற்று ஐஸ்வர்யா இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார் என்று கமல் கூறியதும் அரங்கமே சற்று அமைதியில் உறைந்து போனது. ஐஸ்வர்யா காப்பற்றபட்டத்திற்கான காரணத்தை கூறிய கமல், பார்வையாளர்கள் சரியாக ஈடுபாட்டுடன் வாக்களிக்காததால் தான் ஐஸ்வார்யா காப்பற்றபட்டுவிட்டார் என்று பார்வையாளர்களை குறை கூறினார்.

KAML

மேலும், கடந்த ஆண்டு ஓவியா ஒருவரை காப்பற்ற ஒன்றரை கோடி வாக்குகள் பதிவாகி இருந்தது, ஆனால், அதில் பாதி அளவில் கூட தற்போது ஒட்டு மொத்த வாக்குகள் பதிவாகவில்லை என்று கமல் கூறினார். அது போக ஐஸ்வர்யாவிற்கு தான் அதிக படியான வாக்குகள் பதிவாகி இருக்கிறது, நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரும் வளைக்காதது தான் ஐஸ்வர்யா காப்பற்றபட்டதற்கு காரணம் என்று சப்பை கட்டு கட்டினார் கமல்.

ஆனால், கமல் கூறிய இந்த காரணத்தை நெட்டிசன்களும்,ரசிகர்களும் சற்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. பார்வையாளர்கள் வாக்களிப்பின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது என்று கமல் கூறியிருந்தார். அப்படி இருக்க ஐஸ்வரிவிற்கு மட்டும் எப்படி அதிக வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

Bigg-Boss

தற்போதைக்கு ஐஸ்வர்யாவை வைத்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக கொண்டு சென்று வருகின்றனர். எனவே, அவரை வெளியே அனுப்பிவிட்டால் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்து விடும் என்பதற்க்காக அவரை தொடர்ந்து நிகழ்ச்சியில் தக்கவைத்து வருகின்றனர் என்பது தான் உண்மை என்று பலருக்கும் தெரிகிறது.

Advertisement