தங்கள் படத்திற்கு ஆஸ்கார் கிடைக்காததால் விக்னேஷ் சிவன் வருத்தத்துடன் போட்ட பதிவு.

0
415
vignesh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் அதிகம் சிலம்பு, தனுஷ், அனிருத் உடன் தான் அதிகம் பணியாற்றி இருக்கிறார். இதனிடையே விக்னேஷ் சிவன், நயனை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இவர்களின் திருமணத்திற்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Image

இருந்தாலும் என்னதான் நயன் ஒரு பிஸியான நடிகையாக இருந்து வந்தாலும் விக்னேஷ் சிவனால் ஒரு வெற்றிகமான இயக்குனராக வளம் வர முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தனர். இந்த தயாரிப்பு நிறுவனம் தான் நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள்.

- Advertisement -

சிறந்த திரைப்படத்தை தயாரித்த நயன் – விக்கி :

அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இந்த படத்தை வினோத் ராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். குடிகார தந்தை மற்றும் அவரது மகனின் பயணத்தைப் பற்றிய கதை தான் கூழாங்கல். மேலும், தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர்.

சர்வதேச அளவில் உயரிய திரைப்பட விருதை தட்டிச் சென்ற தமிழ் திரைப்படம்!

ஆஸ்கார் பரிந்துரை :

மேலும், கூழாங்கல் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற ஐம்பதாவது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், டைகர் விருது வெல்லும் முதல் தமிழ் திரைப்படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் 94 வது ஆஸ்கர் விருதுக்காக இந்தியா பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் மண்டேலா படத்துடன் கூழாங்கல் படமும் இடம்பெற்றிருந்தது.

-விளம்பரம்-

சர்வேதச கவனத்தை ஈர்த்த கூழாங்கல் :

இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்ட 14 படங்களில் கூழாங்கல் திரைப்படத்தை தேர்வு செய்து இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பியது. மேலும், இதுவரை எந்த இந்திய திரைப்படமும் ஆஸ்கர் விருதை வென்றது இல்லை. அதிகபட்சமாக சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான பரிந்துரை பட்டியலில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. 1958 ஆம் ஆண்டு வெளிவந்த மதர் இந்தியா மற்றும் 1989 ஆண்டு வெளிவந்த சலாம் பாம்பே ஆகிய படங்கள் மட்டுமே இந்த பட்டியல் இடம் பெற்றிருந்தது. கடைசியாக 2001-ம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளிவந்த லகான் திரைப்படம் இப்பட்டியலில் இடம் பெற்று இருந்தது. பின் 20 வருடங்களாக எந்த இந்தியப் படமும் இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை.

வெளியேறிய கூழாங்கள் :

இந்த நிலையில் கூழாங்கல் திரைப்படம் இந்த பட்டியலில் இடம் பெறும் என்றும் விருது வாங்கும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் பெரிதும் நம்பிக்கை வைத்து இருந்தார். ஆனால், கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் வெளியேறியது. இந்த செய்தியை விக்னேஷ் சிவன் தன் ட்விட்டரில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 22/2022 ஆம் தேதி நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement