ஜித் அடுத்ததாக AK 62 படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருபதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தை லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதுவும் படத்தில் நடிக்கும் நடிகர்களை தேடும் பணியில் படக்குழு இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜ் நடிக்க இருப்பதாகவும், வில்லனாக அரவிந்த சாமி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

இப்படி AK62 படத்தை பற்றி பல தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில் இப்படத்தின் கதை அஜித்திற்கும், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவம் AK62வில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. மேலும் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்குவார் என்று கூறப்பட்டது. அதே போல Ak62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்க இருக்கிறார் என்ற தகவல் உறுதியானது.

Advertisement

AK62 படத்தின் இயக்குனராக இருந்த விக்னேஷ் சிவம் படத்தின் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் நயன்தாராவிற்கு பதிலாக நடிகை திரிஷாவை லைகா நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய மனைவி நயன்தாராவை கதாநாயகியாக அடம்பிடித்திருக்கிறார்.இந்நிலையில் இறுதியாக பிரபல பாலிவுட் நடிகையை தேர்ந்தெடுத்து சம்பளம் விவகாரம் வரையில் சென்ற பிறகு விக்னேஷ் சிவன் அந்த நடிகையும் வேண்டாம் என்று சொல்ல AK62 தயாரிப்பு நிறுவனம் மற்றும் அஜித் கடுப்பாகி விக்னேஷ் சிவமை படத்தில் இருந்து நீக்கியதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும் , வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், Never Ever Give up, விக்கி 6 பணிகளை முழு மனதுடன் விரைவில் தொடருவேன். இந்த கடினமான காலங்களில் நான் சந்தித்த கடவுளுக்கும் அனைத்து அன்பான மக்களுக்கும் நன்றி. உங்கள் அரவணைப்பு மற்றும் என் மீதான நம்பிக்கை என்னைக் கண்டறிய உதவியது மட்டுமல்லாமல், இந்த கணிக்க முடியாத, நிச்சயமற்ற சூழலில் உயிர்வாழ எனக்கு நம்பிக்கையையும் அளித்தது.

இன்று, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனது எதிர்காலத்தை எதிர்நோக்குகிறேன்.எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் சில இனிமையான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டு #nevereverquit #believeinyourself #godisgood #trusttheuniverse போன்ற ஹேஷ் டேக்குகளையும் போட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் Ak 62வில் இருந்து விலகியதால் தான் விக்னேஷ் சிவன் இது போன்று மறைமுகமாக தாக்கி பதிவிட்டுள்ளார் என்று கூறி வருகின்றனர்.

Advertisement