இவன் சீனியர் சார் எனக்கு, இப்போ டை வாங்க காசு இருக்க அதனால இப்படி இருக்கான் – பங்கம் செய்த நெல்சன் – விக்கி.

0
856
vignesh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். விஷுவல் கம்யூனிகேஷன் என்ற இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மேலும், இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தராக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சின்னத்திரையில் மிக பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நெல்சன் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன்மூலம் தான் இவருக்கு சினிமா உலகில் இயக்குனராக பிரபலமானார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இவர் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசனை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்குனார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் மனம் உடைந்து சிலகாலம் நெல்சன் படம் இயக்காமல் இருந்தார். பின் 2018ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கி தமிழ் திரை உலகில் மிக பிரபலமான இயக்குனராக ஆனார். அதனைத்தொடர்ந்து இவர் இயக்கிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

நெல்சன் எடுத்த படங்கள்:

அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தநிலையில் நெல்சனும் தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர், தயாரிப்பாளர் ஆக இருக்கும் விக்னேஷ் சிவனும் கிளாஸ்மேட் அதாவது ஒன்றாக படித்தவர்கள்.

நெல்சன்- விக்னேஷ் நட்பு:

இதை இவர்களே சமீபத்தில் நடந்த இயக்குனர்கள் சந்திப்பில் பேசி இருந்தார்கள். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்கள் பலரும் சந்தித்து பேசியிருந்தார்கள். ஒரு சின்ன பார்ட்டி போலவே கொண்டாடினார்கள் என்று சொல்லலாம் அதில் வெங்கட் பிரபு விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு, சுதா, இயக்குனர் விஜய், நெல்சன், விக்னேஷ் சிவன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விக்னேஷ் சிவனும், நெல்சனும் செம ஜாலியாக ஒருவரை ஒருவர் கலாய்த்து பேசி இருந்தார்கள். அதில் அவர்கள் பேசியது, இரண்டு பேரும் கிளாஸ்மேட்டா என்று பிற இயக்குனர்கள் கேட்டார்கள்.

-விளம்பரம்-

விக்னேஷ்-நெல்சன் பங்கமாக கலாய்த்த வீடியோ:

அதற்கு நெல்சன் நாங்க ரெண்டு பேரும் ஒரே வயசு தான் என்று சொல்கிறார். உடனே விக்னேஷ் சிவன் பொய். இவர் என்னோட பெரியவர். அதாவது 6 வருடம் பெரியவர். டை அடிச்சிட்டு வந்து உட்கார்ந்து இருக்காரு என்று பயங்கரமாக நெல்சனை கலாய்த்து இருந்தார். அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான் என்பதை நிரூபிக்கும் என்று விருது விழா ஒன்றில் நெல்சன் பேசி இருந்தார். அது என்னவென்றால், கோலமாவு கோகிலா படத்திற்கு விருது வழங்கும் விழாவில் நெல்சன் தன்னுடைய திரை பயணத்தையும் விக்னேஷ் சிவனையும் குறித்து பேசினார்.

கோலமாவு கோகிலா உருவான விதம்:

அதில் அவர் கூறியிருப்பது, நான் சினிமா துறையில் வருவதற்கு முதல் காரணமே அனிருத் தான். எனக்கு எப்போ போர் அடித்தாலும் அனிருத் இருக்கும் இடத்திற்கு போய் விடுவேன். அதனால் எப்பவுமே நான் அங்கே தான் இருப்பேன் என்று சொல்லலாம். அனிருத் இவன் ஏன்டா டெய்லி இங்கே வரான் என்று நினைத்து நீ வேணா ஒரு கதை எழுதிட்டு வா படம் பண்ணலாம் என்று சொன்னார். நானும் இரண்டு மாதங்களாக முயற்சி செய்து ஒரு கதை எழுதி கொண்டு கொடுத்தேன். உடனே அவர் குட் என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். பின் அவர் வெளியே வந்து நான் லைக்கா புரடக்ஷன் இடம் பேசி இருக்கிறேன். நீ போய் கதை சொல்லு என்று சொன்னார்.

நயனிடம் கால்ஷீட் வாங்கி தந்த விக்னேஷ்:

அப்படியே ஒவ்வொருவராக பேசி கோலமாவு கோகிலா படம் பண்ண தயார் ஆனேன். அப்போது விக்னேஷ் சிவனிடம் போன் செய்து படத்தின் கதை பற்றி சொன்னேன். உடனே விக்னேஷ் கதை நன்றாக இருக்கிறது என்றார். நான் உன் கருத்து எல்லாம் கேட்கவில்லை. எனக்கு நயன் மேடம் கால்ஷீட் வாங்கி கொடு என்று கேட்டேன். பின் விக்னேஷும் நான் கேட்டதனால் அடுத்த நாளே எனக்கு வாங்கி தந்தார். மேடம் இடம் கதை சொன்னேன். அவர்களும் பிடித்துப்போய் நடித்து தந்தார்கள். அப்படித்தான் இந்த படம் உருவானது. எதிர்பார்த்த மாதிரியே படம் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது என்று கூறி இருக்கிறார். இதிலிருந்து விக்னேஷ் சிவனும், நெல்சனும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்கள் என்பது தெரியவருகிறது.

Advertisement