கொரொனா குறித்து அப்போதே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள வடிவேலு. வீடியோவை பகிர்ந்த விக்கி.

0
120312
- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த கரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். மேலும், கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள்.

- Advertisement -

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. ஆகவே படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் வைரஸ் பரவாமல் தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்கள்.

கரோனா வைரஸ் குறித்து பலர் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ, ஐயா படத்திலிருந்து நடிகர் வடிவேலு அவர்கள் நடித்த ஒரு காட்சி தான்.

-விளம்பரம்-

அந்த காட்சியில் நடிகர் வடிவேலு யாரிடமும் கைகுலுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை கொடுத்திருப்பார். மேலும், விக்னேஷ் சிவன் இந்த வீடியோவை பதிவிட்டு வடிவேலு ஒரு கடவுள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். பல வருடங்களுக்கு முன்னால் வடிவேல் சொன்ன காமெடி தான் தற்போது உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

vignesh-shiv

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். அதன் பின்னர் சில படங்களை இயக்கிய இவர் தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதலராக மாறிவிட்டார். தற்போது இவர்கள் தான் தமிழ் சினிமாவின் ஹாட் இளம் காதல் ஜோடிகள். தற்போது இவர் ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரித்து வருகிறார். நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.

Advertisement