அட பாவமே, மேனேஜரால் காதலுக்கு மரியாதை பட வாய்ப்பை இழந்துள்ள சாக்லேட் ஹீரோ – யார் தெரியுமா ?

0
1839
kadhalukku
- Advertisement -

சினிமாவை பொருத்தவரை பொதுவாக ஒரு நடிகர் தவறவிட்ட படங்கள் இது ஒரு நடிகர் நடித்து அது மாபெரும் வெற்றி அடைந்து இருக்கிறது. அதில் நடிகர் விஜய், அஜித் சூர்யா போன்ற நடிகர்கள் தவறவிட்ட படங்களில் நடித்து அந்தப் படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்த காதலுக்கு மரியாதை படமும் வேறு ஒரு நடிகரடமிருந்து விஜய்க்கு கை மாறிய படம்தான். 1997 ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து இருந்தது. இந்த படம் வெளியாகி இன்றோடு 23 ஆண்டுகள் ஆகியுள்ளது.

-விளம்பரம்-
 kadhalukku mariyadhai

இந்தத் திரைப்படம் ஃபாசில் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன் மற்றும் ஷாலினி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘அணியதிப்ராவு’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான். இதே திரைப்படத்தை தமிழில் ஃபாசில் எடுக்க முடிவு செய்தபோது அவர் முதலில் அணுகியது அப்பாஸ் தான். ஆனால், நடிகர் அப்பாஸ்ஸின் மேனேஜர் சரியான நிர்வாகமின்மை காரணமாக கால்ஷீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். இதனால் நடிகர் அப்பாஸ் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

- Advertisement -

அதன்பின்னரே நடிகர் விஜய்யை அணுகி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார்கள். காதலுக்கு மரியாதை படத்திற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த நேருக்குநேர், ஒன்ஸ்மோர், லவ் டுடே போன்ற படங்களை விட காதலுக்கு மரியாதை திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும், இந்த படத்திற்காக நடிகர் விஜய் சிறந்த நடிகர் என்ற தமிழ்நாடு மாநில விருதையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர் பழனி பாரதி க்கும் சிறந்த பாடலாசிரியர் என்ற தமிழ்நாடு மாநில விருது கிடைத்து இருந்தது.

 abbas"

மேலும், இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்சய் கண்ணா மற்றும் ஜோதிகா நடித்து இருந்தார்கள். மலையாளம் மற்றும் தமிழைப் போலவே இந்தியிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும், காதலுக்கு மரியாதை திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் விஜய் தனது சொந்த குரலில் ‘ஓ பேபி’என்ற பாடலை பாடியிருந்தார். இளையராஜா இசையமைப்பில் விஜய் பாடிய ஒரே பாடல் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அப்பாஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் அவரது திரைவாழ்க்கையில் இந்தப்படம் மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-விளம்பரம்-
Advertisement