தாரை தப்பட்டையுடன் தளபதி. இணையத்தில் கசிந்த விஜய் 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.

0
10260
Vijay-64
- Advertisement -

தென்னிந்திய தமிழ் சினிமா உலகத்தில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இளைய தளபதி விஜய். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிகில்’ படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யின் நடிப்பில் ” தளபதி 64″என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார். மேலும், அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் அறிவித்தார்.

-விளம்பரம்-
Image

விஜய் 64 படத்தை எக்ஸ்பி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், இதில் அனிருத் தான் இசை அமைப்பாளர் என்ற தகவல்கள் வெளிவந்தது.மேலும் இப்படத்தை சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக விஜய் 64 என்ற டைட்டில் வைத்துள்ளார்கள். விஜய் 64வது படம் அக்டோபர் மாதம் நான்கு முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என படக்குழுவினர் மீடியாக்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். மேலும் இந்த படம் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையுலகிற்கு வரும் என்று அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் தெரிவித்தார்.

இதையும் பாருங்க : இந்தியில் மோசமான நிகழ்ச்சியில் கோமாளி பட நடிகை. குவிந்து கிடக்கும் நீச்சல் உடைகளில் புகைப்படங்கள்.

- Advertisement -

இந்த தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமா திரையுலகில் மாஸ் காட்டும் ஹீரோ தான் நடிக்கிறார் என்ற தகவல் வெளியே வந்தவுடன் ரசிகர்களிடையே அதிக வரவேற்பும், ஆர்ப்பாட்டத்தையும் ஏற்படுத்துகிறது. அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தது மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த வரிசையில் தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக ‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதி’ நடிக்க போகிறார் என்ற தெரிந்தவுடன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image

இந்த நிலையில் நடிகர் விஜய் , விஜய் 64 படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த புகைப்படத்தில் தாரை தப்பட்டையுடன் சிலர் சுற்றி நின்று கொண்டு இருக்கின்றனர். விஜய்64 படத்தை குறித்து லோகேஷ் இடம் கேட்டபோது அவர் கூறியது, பிகில் படம் திரையுலகிற்கு வருவதற்கு முன்னரே அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் சீக்கிரமாக சமூக வலைதளங்களில் பரவியது .ஆனால் விஜய் 64 படத்தின் கதை குறித்து எந்த தகவலும் நான் கூறமாட்டேன் என்று கண்டிப்புடன் சொன்னார்.

-விளம்பரம்-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாநகரம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரது இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, விஜய் 64 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்தே காணப்படுகிறது. அதே போல தற்போது வெளியாகியுள்ள விஜய்யின் பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை. எனவே, விஜய் 64 படம் நிச்சயம் விமர்சன ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement